பொது நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை குறித்த முதல் கட்ட வினா-விடை தொகுப்பு

பொது நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை குறித்த முதல் கட்ட வினா-விடை தொகுப்பு

கோவிட்-19 கிருமி பரவாமல் தடுப்பதற்கான நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை தொடர்பான தனது முதல் கட்ட கேள்விகளை வெளியிட்டுள்ளது தேசிய பாதுகாப்பு கவுன்சில்.

மார்ச் 18 முதல் 31 வரை விதிக்கப்பட்ட ஆறு அடிப்படை கட்டுப்பாடுகள் பின்வருமாறு:

  • அனைத்து மக்கள் கூட்டங்களும் தடை செய்யப்பட்டுள்ளன.
  • மலேசியர்களுக்கு வெளிநாடு செல்ல அனுமதி இல்லை.
  • மலேசியாவுக்கு வரக்கூடிய வெளிநாட்டினருக்கு கட்டுப்பாடு உள்ளது.
  • அனைத்து தினப்பராமரிப்பு நிலையங்கள், பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட உள்ளன.
  • அத்தியாவசிய சேவைகளை வழங்குவதைத் தவிர அனைத்து அரசு மற்றும் தனியார் சேவைகளும் மூடப்பட வேண்டும்.

கேள்வி: கொண்டாட்டங்கள், திருமணங்கள், ‘கெண்டூரி’ விருந்துகள் போன்றவை அனுமதிக்கப்படுகிறதா?

ஒரு பெரிய கூட்டத்தை ஈடுபடுத்தாமல் தனிமை விழாக்களை (நிக்கா உட்பட) நடத்தலாம். திருமண வரவேற்புகள் மற்றும் பிற நிகழ்வுகளுக்கு, மலேசியாவில் கோவிட்-19 இன் பரவல் முடியும் வரை இவற்றை ஒத்திவைக்க அறிவுறுத்தப்படுகிறது.

கேள்வி: கட்டுப்பாட்டு உத்தரவு அமல்படுத்த ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் உள்ளதா?

இல்லை. இந்த உத்தரவு நாள் முழுவதும் நடைமுறையில் உள்ளது.

கேள்வி: எனது அத்தியாவசிய பொருட்கள் தீர்ந்துவிட்டால், நான் பொருட்களை வாங்க வெளியே சென்று பின் திரும்பலாமா?

ஆம்

கேள்வி: நான் ஒரு மலேசிய குடிமகள். என் கணவர் இங்கிலாந்து குடிமகன். இந்த கட்டுப்பாட்டு காலத்தில் மலேசியா திரும்புவதற்கு எங்களுக்கு அனுமதி உள்ளதா?

ஆம், திருமணத்தை உங்கள் கணவர் நிரூபிக்க முடியும் என்ற நிபந்தனையின் பேரில் அனுமதிக்கப்படும். திருமணம், மலேசிய அரசாங்கத்திலோ அல்லது அவரின் தாய் நாட்டின் அரசாங்கத்திலோ பதிவு செய்யப்பட்டிருந்தாலும் சரி. உங்கள் கணவர் உடல்நலத் சோதனைகளை மேற்கொண்டு தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் நோய்த்தொற்றுக்கான வாய்ப்பைக் குறைக்கவும் மற்றவர்களுக்கு நோய்த்தொற்றைப் பரப்பாமலும் தடுக்கும்.

கேள்வி: எனது பிள்ளை வெளிநாட்டில் படிக்கும் மாணவர். அவர் மலேசியா திரும்ப அனுமதிக்கப்படுவாரா?

ஆம். வெளிநாடுகளில் உள்ள எந்த மலேசிய குடிமக்களும் இந்த கட்டுப்பாட்டு காலத்தில் நாடு திரும்ப அனுமதிக்கப்படுகிறார்கள். இருப்பினும், நோய்த்தொற்றுக்கான வாய்ப்பைக் குறைக்கவும் நோய்த்தொற்றை மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்கவும் அந்த நபர் உடல்நலத் சோதனைகள் மற்றும் சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளைச் செய்ய வேண்டும்.

கேள்வி: நான் மலேசியாவில் நீண்ட கால விசா வைத்திருப்பவன். இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு நான் எனது சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளேன். இந்த தடைசெய்யப்பட்ட காலகட்டத்தில் வேலைக்காக மலேசியா திரும்புவதற்கு எனக்கு அனுமதி உள்ளதா?

அத்தியாவசிய சேவைத் துறைகளில் பணிபுரியும் அந்நியர்கள் மட்டுமே கட்டுப்பாட்டுக் காலத்தில் மலேசியா திரும்ப அனுமதிக்கப்படுகிறார்கள். அந்நியத் தொழிலாளர்கள் தங்கள் முதலாளிகளிடமிருந்து உறுதிப்படுத்தல் கடிதத்தைப் பெற்று, நாட்டிற்குள் நுழையும் போது அதை குடிவரவு திணைக்களத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

கேள்வி: நான் சிங்கப்பூரில் வேலை செய்கிறேன். சிங்கப்பூரில் உள்ள எனது அலுவலகத்திற்கு பயணிக்க எனக்கு அனுமதி உள்ளதா?

இல்லை. நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு இந்த நாட்டில் உள்ள அனைத்து தனிநபர்களுக்கும் பொருந்தும். அண்டை நாடுகளில் பணிபுரியும் ஆனால் மலேசியாவில் வசிக்கும் அனைத்து நபர்களும் இந்த காலகட்டத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவதில்லை, இது குறித்து தங்கள் முதலாளிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

கேள்வி: உள்நாட்டு விடுமுறைக்குச் செல்வதற்கான திட்டங்களை நான் செய்துள்ளேன், தேவையான பணத்தையும் செலுத்தியுள்ளேன். எனது விடுமுறையுடன் தொடர முடியுமா?

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ், விடுமுறை மையங்கள் உட்பட சமூக நடவடிக்கைகளுக்காக எங்கும் செல்வதற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த பயணம் முக்கியமான தேசிய சேவைகளுடன் தொடர்புடையதாக இல்லாவிட்டாலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உங்கள் விடுமுறையை தொடர வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

கேள்வி: அத்தியாவசிய சேவைகளை வழங்கும் ஒரு துறையில் பணிபுரியும் ஒரு நபரை அவர் வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் போது அழைத்து வர விமான நிலையத்திற்கு செல்ல முடியுமா?

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் சிறிது நேரத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுகிறது.
கேள்வி: நீட்டிப்பு செய்யப்பட்ட விடுமுறை வகுப்புகளை பள்ளிகள் நிவாரணம் செய்ய வேண்டுமா?
இல்லை.

கேள்வி: அனைத்து பொது மற்றும் தனியார் உயர்கல்விக் கூடங்கள் மற்றும் பயிற்சி மையங்களும் இந்த உத்தரவின் கீழ் வருகிறதா?

ஆம்.

கேள்வி: தங்கும் வசதிகளுடன் கல்வி கற்கும் மாணவர்கள், குறிப்பாக வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் விடுதிகளில் தங்குவது பற்றி?

கட்டுப்பாட்டு காலத்தில் அனைத்து மாணவர்களும் தங்களின் தங்கும் இடங்களில் தங்க வேண்டும்.

இந்த காலகட்டத்தில் வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப அறிவுறுத்தப்படுகிறார்கள். வெளியேறும் மாணவர்கள் கட்டுப்பாட்டு ஒழுங்கு காலத்தில் திரும்பி வர அனுமதிக்கப்படுவதில்லை.

மலேசியாவில் தங்க முடிவு செய்யும் வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் கல்வி நிர்வாகத்திடம் அறிவித்து, கட்டுப்பாட்டு ஒழுங்கைக் கடைப்பிடிக்க வேண்டும்.

கேள்வி: துரித உணவு விற்பனை நிலையங்கள், உணவகங்கள் அல்லது உணவு மையங்கள் தொடர்ந்து செயல்படுமா?

ஆம். இருப்பினும், அவை வெளியே எடுத்து செல்லும் உணவுகள் (take-out orders) அல்லது உணவு விநியோகத்தை (delivery orders) அளிக்க மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.

கேள்வி: பொது போக்குவரத்து இன்னும் இயங்குமா?

ஆம்.

கேள்வி: கட்டுப்பாடு உத்தரவு விதிக்கப்படுவதற்கு முன்பு எனது தங்கும் விடுதிக்கு (ஹோட்டல்) பணம் செலுத்தியுள்ளேன். பணத்தைத் திரும்பப்பெற நான் கேட்கலாமா?

இந்த விவகாரத்தை தங்கும் விடுதியுடன் (ஹோட்டலுடன்) விவாதிக்க பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

கேள்வி: சோலத் ஜெனாசா (solat jenazah) மற்றும் தஹில் (tahlil) பிரார்த்தனை அனுமதிக்கப்படுகிறதா?

ஆம், சோலட் ஜெனாசாவுக்கு மட்டுமே அனுமதி உள்ளது. இதை நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மசூதி அல்லது சூராவ் சபை நடத்த வேண்டும்.