கொரோனா வைரஸ்: ஜப்பானில் 36 பேர், தென் கொரியாவில் 84 பேர் பலி

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஜப்பானில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் தென் கொரியாவில் பலியோனோர் எண்ணிக்கை 84 ஆக அதிகரித்துள்ளது.

டோக்கியோ: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 160-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 7 ஆயிரத்து 987 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 426 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.

இந்நிலையில், தென்கொரியா நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 84 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 8 ஆயிரத்து 413 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதேபோல், ஜப்பான் நாட்டிலும் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 868 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

maalaimalar