கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 176 நாடுகளுக்கு பரவி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

உலகம் முழுவதும் 176 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

குறிப்பாக தற்போது சீனாவுக்கு அடுத்து இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.

இதுவரை கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் 8 ஆயிரத்து 967 பேர் பலியாகி இருக்கிறார்கள். இதனால் பலி எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. மொத்தம் 2 லட்சத்து 19 ஆயிரத்து 240 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 85 ஆயிரத்து 745 பேர் குணமடைந்துள்ளனர்.

சீனாவில் நேற்று முன்தினம் 8 பேர் உயிரிழந்தனர். அங்கு மொத்தம் 3 ஆயிரத்து 245 பேர் பலியாகி இருக்கிறார்கள். இத்தாலியில் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 978 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் நேற்று முன்தினம் மேலும் 5 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 155 ஆக அதிகரித்தது. புதிதாக 177 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒட்டு மொத்தமாக 9 ஆயிரத்து 438 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இங்கிலாந்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்தது. நேற்று முன்தினம் மேலும் 33 பேர் பலியானார்கள். 2 ஆயிரத்து 628 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல் நெதர்லாந்தில் 58 பேரும், ஜெர்மனியில் 28 பேரும், ஜப்பானில் 32 பேரும், பெல்ஜியத்தில் 14 பேரும், சுவீடனில் 10 பேரும், இந்தோனேசியாவில் 19 பேரும், ஈராக்கில் 12 பேரும், கிரீஸ், போலந்தில் தலா 5 பேரும், ஆஸ்திரேலியாவில் 6 பேரும், லெபனான், பிரேசிலில் தலா 4 பேரும், கனடாவில் 9 பேரும் பலியாகி இருக்கிறார்கள்.

மேலும் மலேசியா, போர்ச்சுக்கல், அயர்லாந்து, பாகிஸ்தான், அர்ஜென்டினா, பல்கேரியா, அல்பேனியா, மொரோக்கோ, உக்ரைனில் தலா 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.

maalaimalar