பொது போக்குவரத்து நடவடிக்கைகள் காலை 6 – 10 மணி வரையும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும்

நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில், பொது போக்குவரத்து காலை 6 மணி முதல் காலை 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் மட்டுமே இயக்க அனுமதிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

இன்று பிற்பகல் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசினார். அவர் காவல்துறை, ராணுவம், ரேலா மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகளுக்கு இடையிலான சந்திப்பின் முடிவை அறிவித்தார்.

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் கீழ், ஒருவருக்கொருவர் ஒரு மீட்டர் தூரம் கூடல் இடைவெளியில் இருக்கவேண்டும் என்பது பொது போக்குவரத்தில் அமல்படுத்துவது மிகவும் கடினம் என்றார்.

இருப்பினும், வாடகை மோட்டார் வண்டி (டாக்ஸி) மற்றும் இ-ஹெயிலிங் சேவைகள் வழக்கம் போல் தொடர்ந்து செயல்பட முடியும் என்று இஸ்மாயில் கூறினார்.

பெட்ரோல் நிலையங்கள் பொது பயன்பாட்டிற்கு கிருமிநாசினி திரவங்களை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.