புதிய கோவிட்-19 பாதிப்புகள் பெரும்பாலானவை லெம்பா பந்தாய் மற்றும் பெட்டாலிங்கில் குவிந்துள்ளன

புதிய கோவிட்-19 பாதிப்புகள் பெரும்பாலானவை லெம்பா பந்தாய் மற்றும் பெட்டாலிங்கில் குவிந்துள்ளன.

சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, லெம்பா பந்தாய் (Lembah Pantai) மற்றும் பெட்டாலிங் (Petaling) இப்போது கோவிட்-19 பாதிப்புகளில் முறையே 167 மற்றும் 158 ஆக உள்ளன. லெம்பா பந்தாயில் 77 பாதிப்புகளும், பெட்டாலிங்கில் 62 பாதிப்புகளும் அதிகரித்துள்ளன.

லெம்பா பந்தாய், பந்தாய் டாலாம் மற்றும் பாங்சர் ஆகிய பகுதிகளை கொண்டுள்ளது.

பெட்டாலிங், கிள்ளான் பள்ளத்தாக்கின் பெரும்பகுதியை கொண்டுள்ளது. இதில், ஷா ஆலம், பெட்டாலிங் ஜெயா மற்றும் சுபாங் ஜெயா ஆகிய மாநகராட்சிகள் அடங்கும்.

கோவிட்-19 பாதிப்புகள் அதிக எண்ணிக்கையில் உள்ள மற்ற மாவட்டங்களில் ஹுலு லங்காட் 103 (28 அதிகரித்துள்ளது), சிரம்பான் 74 (32 அதிகரித்துள்ளது), ஜொகூர் பாரு 59 (6 அதிகரித்துள்ளது), கோம்பாக் 50 (12 அதிகரித்துள்ளது), தீத்தீவாங்சா 46 (5 அதிகரித்துள்ளது) மற்றும் கோத்தா பாரு 43 (14 அதிகரித்துள்ளது).

கிழக்கு மலேசியாவில், கடந்த மூன்று நாட்களில் புதிய கோவிட்-19 பாதிப்புகளின் அதிகரிப்பு குறைவாகவே உள்ளது.

தாவாவ் (49 வழக்குகள்), கூச்சிங் (44), லாஹாட் டாத்து (34), கோத்தா கினபாலு (24) ஆகிய நான்கும், பாதிப்பின் மோசமான மாவட்டங்கள் ஆகும்.

மார்ச் 18 முதல் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை அமல்படுத்தியதைத் தொடர்ந்து நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் கிட்டத்தட்ட ஸ்தம்பித்துள்ளன.

இந்த உத்தரவின் கீழ், அத்தியாவசியமற்ற வணிகங்கள் மற்றும் சேவைகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மக்கள் அனாவசியமாக வீட்டை விட்டு வெளியேறுவதையும் தவிர்க்க வேண்டும் என்று வழியுறுத்தப்பட்டுள்ளனர்.