ஏமனில் கிளர்ச்சியாளர்கள் 25 பேர் கொன்று குவிப்பு – ராணுவம் அதிரடி

ஏமன் ராணுவ தாக்குல் – கோப்புப்படம்

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகளை குறிவைத்து ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் 25 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

ஏடன்: ஏமனில் அந்த நாட்டு அரசுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அங்கு தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் அந்த நாட்டின் வடகிழக்கு பகுதியில் மரீப் மாகாணம் சிர்வா மாவட்டத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகளை குறிவைத்து ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது.ஒரே சமயத்தில் வான் வழியாகவும், தரை வழியாகவும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனால் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தப்பி செல்ல முடியாத வகையில் சுற்றிவளைக்கப்பட்டனர். இந்த அதிரடி தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் 25 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் அவர்களது பதுங்குக் குழிகள், ஆயுதம் நிரப்பப்பட்ட வாகனங்கள் உள்ளிட்டவை நிர்மூலமாக்கப்பட்டன.

malaimalar