கோலாலம்பூர் முழுவதும் கோவிட்-19 சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்திய மாவட்டமான செராஸ் இந்த நோய்க்கு 44 நேர்மறையான பாதிப்புகளை பதிவு செய்த பின் இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
மலேசிய சுகாதார அமைச்சின் அதிகாரப்பூர்வ முகநூல் (பேஸ்புக்) பதிவில், செராஸ் சிவப்பு மண்டல பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தரவு காட்டுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
“ஏப்ரல் 5 மதியம் 12 மணி வரை மாநில மற்றும் பிரதேசங்களின் அடிப்படையில் பாதிப்புகளின் பரவல்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய இணைப்பான செராஸ் மாவட்டம், மொத்த சிவப்பு மண்டல மாவட்டங்களை 18-ஆக அதிகரித்துள்ளது.
“வீட்டிலேயே இருப்பதும் மற்றும் கூடல் இடைவெளியை பின்பற்றுவதன் மூலமும் தொற்றுநோய்களின் சங்கிலியை உடைக்கக்கூடும்” என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
38 நேர்மறையான கோவிட்-19 பாதிப்புகளுடன், செராஸ் முன்பு ஆரஞ்சு மண்டலத்தில் இருந்தது.
நேற்று, தேசிய நெருக்கடி மற்றும் அவசரநிலை பதிலளிப்பு மையத்தின் (Pusat Kesiapsiagaan dan Tindak Cepat Krisis Kebangsaan (CPRC)) கருத்துப்படி, கோலாலம்பூர் பகுதியில் ஒரு சிவப்பு மண்டலமும் சிலாங்கூரில் இரண்டும் என தெரிவித்தது. இங்கு மொத்தம் 300 நேர்மறை பாதிப்புகள் உள்ளன.
CPRC முன்பு 17 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அடையாளம் காணப்பட்டதாகக் கூறியிருந்தது.
செராஸைத் தவிர, கோலாலம்பூரில் சிவப்பு மண்டலமாகக் குறிக்கப்பட்ட பிற பகுதிகள் கெப்போங், லெம்பா பந்தாய் மற்றும் தீத்திவாங்சா ஆகும்.