ஆறு போர்களை காட்டிலும் அதிகமானோரை இழந்த அமெரிக்கா

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஆறு போர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட கொரோனா வைரஸ் தாக்குதலில்பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகின்றன. தற்போது வூஹான் மாகாணத்தில் கொரோனா முடிவுக்கு வந்து விட்டதாக சீனா அறிவித்துள்ளது.

அதே நேரத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தை வகிக்கிறது.அங்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதே போல் பலியானோரின் எண்ணிக்கை இத்தாலி, ஸ்பெயின் நாடுகளுக்கு அடுத்த படியாக 11 ஆயிரத்தை தொட உள்ளது.

1775ம் ஆண்டு முதல் அமெரிக்கா ஆறு போர்களை சந்தித்துள்ளது. அமெரிக்க புரட்சி, 1812-ல் நடை பெற்ற போர், இந்திய, மெக்ஸிகோ, ஸ்பானிய அமெரிக்கா போர், வளைகுடா போர் என ஆறு போர்களை சந்தித்து உள்ளது. இந்த மொத்த போர்களில் பலியான அமெரிக்கர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து961 பேர் மட்டுமே. கடந்த 4 ம் தேதி உலகளவில் அமெரிக்காவில் ஒரே நாளில் சுமார் 1330 பேர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் உள்ள மாகாணங்களில் பலியானோரின் எண்ணிக்கையில் நியூயார்க் முதலிடத்தை பிடிக்கிறது. இதற்கு காரணம் அங்கு ஒரு சதுர கி.மீ தூரத்திற்கு சுமார்27 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்குஒரு லட்சத்திற்கும் மேல் பாதிக்கப்பட்டு 5 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.

இரண்டாம் இடத்தை நியூஜெர்சி மாகாணம் பிடித்துள்ளது. இங்கு 41 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு 100க்கும் மேல் பலியாகி உள்ளனர். மிக்சிகன் மாகாணம் 3 ம் இடத்தை பிடித்துள்ளது. இங்கு 17ஆயிரத்திற்கும் மேல் பாதிக்கப்பட்டு 700க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

கலிபோர்னியா மாகாணத்தில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 385க்கும் மேற்பட்டோர் பலியாகி 4 ம் இடத்தை பிடித்துள்ளது. 5 ம் இடத்தில் லூசியானா மாகாணம் உள்ளது. 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையை விட மூன்றரை மடங்கு அதிகமாகும்.

dinamalar