கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் இதுவரை 1,02,606 பேர் பலியாகி உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் கூறுகின்றன. இத்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,91,719ஆக உயர்ந்திருக்கிறது.
- கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் இதுவரை 1,02,606 பேர் பலியாகி உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் கூறுகின்றன.
அதிகபட்சமாக இத்தாலியில் 18,849 பேர் இறந்துள்ளனர்; அமெரிக்காவில் 18,637 பேர் இறந்துள்ளனர்.
உலக நாடுகள் அவசரப்பட்டு ஊரடங்கை தளர்த்த வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 761ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் மேலும் 77 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.
உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கை உலக நாடுகள் அவசரப்பட்டு தளர்த்த வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
இது வைரஸ் மீண்டும் பரவ வழிவகுக்கும் என்று அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியுள்ளார்.
BBC.TAMIL