செயலில் உள்ள பாதிப்புகளின் அடிப்படையில் 16 சிவப்பு மண்டலங்கள் உள்ளன

மலேசியாவில் செயலில் உள்ள கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கையை மாவட்டங்களின் அடிப்படையில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. செயலில் உள்ள பாதிப்புகளால் வகைப்படுத்தப்படும் போது தற்போது 16 சிவப்பு மண்டல பகுதிகள் உள்ளன என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

முன்னதாக, மொத்த கோவிட்-19 நேர்மறை பாதிப்புகளின் அடிப்படையிலான சிவப்பு மண்டலத்தை மட்டுமே சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், ஒட்டுமொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை ஒரு பகுதியில் பாதிப்பு குறித்த தவறான கணிப்பைக் கொடுக்கக்கூடும்.

40க்கும் மேற்பட்ட பாதிப்புகள் உள்ள பகுதிகள் சிவப்பு மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன, அதன்பிறகு ஆரஞ்சு மண்டலங்கள் (20 முதல் 40 பாதிப்புகள்), மஞ்சள் மண்டலங்கள் (20 க்கும் குறைவான பாதிப்புகள்) மற்றும் பச்சை மண்டலங்கள் (பாதிப்புகள் இல்லை).

மொத்தம் 41 பாதிப்புகளை பதிவு செய்த பின்னர், ஜோகூரின் கூலாய், 29வது சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டதாக நேற்றைய அறிக்கை தெரிவித்தது.

இன்று MOH விளக்கப்படத்தின் படி, கூலாயில் தற்போது மொத்தம் 45 பாதிப்புகள் உள்ளன, ஆனால் 23 மட்டுமே செயலில் உள்ளன.
இன்று வெளியிடப்பட்ட செயலில் உள்ள பாதிப்புகளின் தகவல் படி, 16 சிவப்பு மண்டலங்கள் உள்ளன – பெட்டாலிங், ஹுலு லங்காட், கோம்பாக், கிள்ளான், செராஸ், கெப்போங், லெம்பா பந்தாய், தீத்திவாங்சா, ஜாசின், சிரம்பான், குளுவாங், ஜோகூர் பாரு, குவாந்தான், கூச்சிங், கோத்தா சமராஹான் மற்றும் தவாவ்.