அமெரிக்கா: பலியானவர்களின் எண்ணிக்கை 40,000-ஐ தாண்டியுள்ளது

உலகையே முடக்கிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை சுமார் 24 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,65,000ஐ தாண்டியுள்ளது. குணமானவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 25 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் மட்டும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 40,000-ஐ தாண்டியுள்ளது. இது உலக அளவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையில் சுமார் 25 சதவீதமாகும்.

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாகாணமான நியூயார்க்கில், வைரஸ் தொற்றின் தீவிரம் உச்சத்தைக் கடந்துவிட்டதைப் போல தெரிவதாக அந்த மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவில் ஊரடங்கு உத்தரவைத் தளர்த்த வேண்டும் எனக்கோரி நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு அதிபர் டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளதை தொடர்ந்து அவருக்கும், மாகாண ஆளுநர்களுக்கும் இடையேயான மோதல் வலுத்து வருகிறது. இந்த போராட்டங்களுக்கு அதிபர் ஆதரவளித்துப் பேசி வருவது, மிகவும் அபாயகரமான விளைவுகளையே ஏற்படுத்தும் என வாஷிங்டன் ஆளுநர் கவலை தெரிவித்துள்ளார்.

BBC.TAMIL