நைஜீரியா நாட்டில் கிராமங்கள் மீது கொள்ளை கும்பல் நடத்திய தாக்குதலில் 47 பேர் கொல்லப்பட்டனர்.
கனோ, நைஜீரியா நாட்டின் வடக்கே கட்சினா என்ற பகுதியில் பல கிராமங்கள் உள்ளன. அந்த பகுதிகளில் மக்கள் பலர் விவசாய தொழில் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், தத்சென்மா, தன்மூசா மற்றும் சபானா ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு கிராமங்களை இலக்காக கொண்டு மோட்டார் பைக்குகளில் வந்த சிலர் திட்டமிட்ட மற்றும் தொடர்ச்சியான தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 47 பேர் கொல்லப்பட்டனர்.
இதனை அதிபர் முகமது புகாரியின் அலுவலகம் மற்றும் உள்ளூர் போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர். இதன் எதிரொலியாக ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் உள்பட பாதுகாப்பு படைகள் அந்த பகுதிகளில் குவிக்கப்பட்டு உள்ளன.
dailythanthi