இன்று பிற்பகல் நிலவரப்படி மலேசியாவில் 57 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இப்போது நாட்டின் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 5,482 ஆக உள்ளது.
இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, வெளிநாடுகளில் இருந்து திரும்பி வந்த மலேசியர்கள் 18 இறக்குமதி பாதிப்புகளை கொண்டுவந்துள்ளதாகவும், உள்ளூர் தொற்றுநோய்கள் 49-ம் அடங்கும் என்று கூறினார்.
மேலும் 54 நோயாளிகள் மீட்கப்பட்டதாகவும் நூர் ஹிஷாம் குறிப்பிட்டார். மொத்த குணமடைந்து மீட்கப்பட்டவர்கள் 3,349 அல்லது 61.1 சதவீதமாக இருக்கிறது.
மலேசியாவில் கோவிட்-19 செயலில் உள்ள பாதிப்புகள் 2,041 ஆகும்.
மேலும் மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன. இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை 92 ஆகி உள்ளன.