அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் மலாய்க்காரர் அல்லாதாரை மிரட்டி அவமானப்படுத்துவதில் உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் மிஞ்சுவதற்கு வழி வகுத்த அதே மனிதர்களே மலேசியா பல இன நாடு எனப் பிரகடனம் செய்கின்றனர்.
துணைப் பிரதமர்: ‘வெற்றி பெற்ற பல இன நாடுகளில் மலேசியாவும் ஒன்று’
பகுத்தறிவு: இனவாதத்தைத் தூண்டி விடும் துணைப் பிரதமர் முஹைடின் யாசினை ஏன் ஹுவா ஜொங் தனது விருந்துக்கு அழைத்தது என்பது எனக்குப் புரியவே இல்லை. (அல்லது அழைக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டதா ?)
மலேசியா பல இன நாடு எனப் பிரகடனம் செய்யும் அதே மனிதர்களே ஒவ்வொரு ஆண்டும் அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் மலாய்க்காரர் அல்லாதாரை மிரட்டி அவமானப்படுத்துவதில் உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் மிஞ்சுவதற்கு வழி வகுக்கின்றனர் என்பதே பெரிய வேடிக்கை.
அவர்கள், அதே ஆண்டுக் கூட்டங்களை மலாய்க்காரர் அல்லாதாருக்கு எதிராக கற்பனையாக உருவாக்கப்பட்ட போராட்டத்தில் வன்முறையில் ஈடுபடுமாறு மலாய்க்காரர்களைத் தூண்டி விடுவதற்கு அனுமதி பெற்ற கருத்தரங்கமாகவும் மாற்றி விடுகின்றனர்.
சரவாக்டயாக்: துணைப் பிரதமர், பல இன/பல சமய பக்காத்தான் ராக்யாட்டை ஆதரிக்க வேண்டாம் என மலாய்க்காரர்களை அச்சுறுத்தி விட்டு சீனர்களிடம் பல இனவாதத்தை வெட்கமில்லாமல் போதிக்கிறார்.
ஒரு வினாடி அவர் இதனைச் சொல்கிறார். அடுத்த வினாடி அதற்கு நேர்மாறாகப் பேசுகிறார். இது தான் அம்னோ தலைவர்களுடைய சிந்தனை, நடத்தை, அரசியல். மலேசியர்களே தயவு செய்து அம்னோ/பிஎன்- னுக்கு வாக்களிக்க வேண்டாம்.
கால்வெர்ட் யாப்: இன்று முதலில் மலாய்க்காரன் இரண்டாவதாக மலேசியப்ன், அடுத்து டிஏபி அதிகாரத்துக்கு வந்தால் மலாய்க்காரர்கள் எல்லாவறையும் இழந்து விடுவர் என அவர்களிடம் சொல்வது, அடுத்து கிரிஸ் கத்தியை உயர்த்திக் காட்டுவது, அடுத்து மலாய்க்காரர்களிடமிருந்து பிடுங்கிக் கொள்ள சீனர்கள் விரும்புவதாகச் சொல்வது, இப்போது மலேசியா வெற்றி பெற்ற பல இன நாடு எனச் சொல்வது ?
நாம் வெற்றி அடைந்துள்ளோம். அதற்கு ஒற்றுமைப் பண்பாட்டுடன் நாம் மலாய்க்காரர்களாக, சீனர்களா, இந்தியர்களா பிறந்துள்ளதே காரணம். நீங்களோ அம்னோவோ அல்லது பிஎன்- னோ காரணமல்ல.
அன்வார், மலேசியாவில் இனப் பிரச்னை மீது தொடக்க நாள் முதல் ஒரே மாதிரி பேசி வருகிறார். கூட்டத்துக்கு தகுந்தவாறு கதைகளை மாற்றும் அம்னோ, மசீச, மஇகா-வைப் போல அல்ல. உங்களுக்கு வெட்கமில்லையா ?
பல இனம்: ஒருவர் மற்றவர்களை மருட்டுவது தான் முஹைடின் கூறுகின்ற வெற்றி பெற்ற பல இன நாட்டுக்கான அர்த்தம். இந்த நாட்டை என்றாவது ஒரு நாள் உண்மையிலேயே பல இனக் கட்சி ஒன்று வழி நடத்தி நாட்டை மிகுந்த முன்னேற்றத்துக்குக் கொண்டு செல்லும் நான் கனவு கண்டேன். அந்தக் கனவு விரைவில் பலிக்கப் போகிறது என என் உள்ளுணர்வு சொல்கிறது.
பக்காத்தான் அம்னோவுக்குப் பதிலடி
தனா55: பக்காத்தான் குழுவுக்கு பாராட்டுக்கள். நீங்கள் ஆட்சிக்கு வந்தது முதல் உருப்படியான நன்மைகளை செய்துள்ளீர்கள். இன, சமய வாதங்களை ஒதுக்கி வைத்துள்ளீர்கள். நீங்கள் சேவை செய்யும் மக்களுடன் நல்ல முறையில் தொடர்பு கொள்கின்றீர்கள். நீங்கள் முதிர்ச்சியும் அடைந்துள்ளீர்கள்.
ஆண்டு இனவாத மாநாட்டு ரௌடிகளுடன் ஒப்பிடுகையில் நீங்கள் உண்மையில் தரமாக நடந்து கொள்கின்றீர்கள். நீங்கள் புத்ராஜெயாவுக்குச் செல்லும் நாளை நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அது நம்மால் முடியும் !
பார்வையாளன்: பக்காத்தான் தனது கருத்துக்களை கிராமப்புற மக்களுக்கு தெரிவிப்பதற்கு எதிர்நோக்கும் சிரமங்களைப் போக்குவதற்கான வழிகளை ஆராய வேண்டும். காரணம் அடுத்த பொதுத் தேர்தலில் முடிவுகளை நிர்ணயிக்கப் போவது அவர்களே.
சாதாரண கிராம மக்கள், கணினி ஆற்றல் இல்லாதவர்கள். அதனால் மாற்று ஊடகங்கள் அவர்களை அடைய முடியாது. அச்சு, மின்னியல் ஊடகங்கள் மீது பிஎன் முழுக்கட்டுப்பாட்டை பெற்றுள்ளதால் அவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளனர்.
முக்கியமான பக்காத்தான் கூட்டங்களில் நிகழ்த்தப்படும் உரைகளை சிடி-யில் பதிவு செய்து அதனை கிராமப் புறங்களில் விநியோகம் செய்யலாம்.
அலன் கோ: அந்த மூன்று அம்னோ கோமாளிகள் யார் ? ஒருவர் தவளை இனத்தை சார்ந்தவர். இப்போது செனட்டராக இருக்கிறார். அவர் சிலாங்கூரை இப்போது எதிர்க்கட்சிகளிடமிருந்து காப்பாற்ற விரும்புகிறார்.
எல்லாம் சரி தான் என்ற மனிதர் ஷா அலாமில் இப்போது அரண்மனையைப் போன்ற மாளிகைக்கு சொந்தக்காரர். விருப்பமுள்ள விற்பவரும் வாங்குவோரும் செய்து கொண்ட ஒர் உடன்படிக்கையின் கீழ் அது மூன்று மில்லியன் ரிங்கிட் கழிவு விலையில் பெறப்பட்டுள்ளது.
இன்னொரு மனிதர், இப்போது விவசாய அமைச்சராக இருப்பவர். நெல் விவசாயிகளுக்காக இன்னும் விநியோகம் செய்யப்படாமல் இருக்கும் 73 மில்லியன் ரிங்கிட்டுக்கு என்ன நேர்ந்தது என்பதை அவர் இன்னும் விளக்கவே இல்லை. பிரபலமான அம்னோ தலைவருடைய குடும்பம் ஒன்றுக்கு கால்நடை வளர்ப்புக்காக கொடுக்கப்பட்ட 250 மில்லியன் ரிங்கிட் கடன் ஊழலும் இன்னும் தீரவில்லை.
கடைசியாக அம்னோ அமைச்சர்களுடைய ஊழல்கள் சம்பந்தமாக தம்மிடம் ஆறு பெட்டிகள் நிறைய ஆதாரங்கள் பத்திரங்கள் வடிவில் இருப்பதாக கடந்த காலத்தில் கூறிக் கொண்ட ஒருவர், செனட்டராக நியமிக்கப்பட்ட பின்னர் இப்போது ஊமையாகி விட்டார்.
வெற்றி பெறும் வாய்ப்பைக் கொண்ட அந்த வேட்பாளர்கள் அனைவரும் சிலாங்கூரை பக்காத்தானிடமிருந்து காப்பாற்றப் போகின்றார்களா ?