கோவிட்-19 வளைவை மலேசியா சமனாக்கிவிட்டது: நூர் ஹிஷாம்

நோய்த்தொற்று வளைவைத் சமனாக்குவதில் மலேசியா வெற்றி பெற்றுள்ளது. இப்போது கோவிட்-19 தொற்றுநோயை அகற்றுவதற்கான மீட்பு நிலையில் (recovery phase) உள்ளது என்று சுகாதார அமைச்சின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இது, முன்கணிப்பு மாதிரியின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஏப்ரல் 3ம் தேதி 217 புதிய பாதிப்புகள் இருந்தன, ஆனால் அமைச்சு அதன் பின்னர் பாதிப்புகளில் எந்த ஏற்றத்தையும் காணவில்லை.

ஆரம்பத்தில், ஏப்ரல் 14 ஆம் தேதி வாக்கில் அமைச்சு 6,300 புதிய பாதிப்புகளின் உச்சத்தை அடையும் என்றும் அதை எதிர்கொள்ள ஆயத்தமாகவும் இருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை அப்படி எட்டவில்லை.

“நாம் இப்போது மீட்புக் கட்டத்தில் இருக்கிறோம். உச்ச கட்டத்தில் இல்லை. தொடர்ந்து பாதிப்புகளை குறைக்கவும் நாங்கள் நம்புகிறோம்”.

“ஆனால் நாம் நம் பாதுகாப்பைக் குறைத்தால், ஒரு அதிவேக எழுச்சி ஏற்படக்கூடும். எனவே முதல் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு மற்றும் இரண்டாம் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு ஆகியவற்றிலிருந்து நாம் தொடர்வது முக்கியம்”.

“முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவிலிருந்து சில வெற்றிகளை நாம் கண்டுவருகிறோம். பாதிப்புகளை கட்டுப்படுத்தியுள்ளோம், வளைச்சமனாக்கல் செய்துள்ளோம், புதிய தொற்றை கட்டுப்படுத்தியுள்ளோம்” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.