கோவிட்-19: 57 புதிய பாதிப்புகள், 84 நோயாளிகள் குணமடைந்துள்ளனர், மேலும் 2 இறப்பு

84 கோவிட்-19 நோயாளிகள் முழுமையாக குணமடைந்து இன்று வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மொத்த குணமடைந்த  நோயாளின் எண்ணிக்கை 4,171 ஆக அல்லது 69.5 சதவீதமாக உள்ளது.

சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, இன்று நண்பகல் வரை 57 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்றும், மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6,002 ஆக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

கோவிட்-19 நோய்த்தொற்றுடன் செயலில் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை 1,729 என்று அவர் கூறினார்.

“புதிய 57 பாதிப்புகளில் 25 இறக்குமதி பாதிப்புகள், 32 உள்நாட்டு பாதிப்புகள்” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

மேலும் இரண்டு நோயாளிகள் இறந்துவிட்டதாக நூர் ஹிஷாம் கூறினார். இதனால் இறப்பு எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது, இது மொத்த பாதிப்புகளில் 1.7 சதவீதமாகும்.

தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) மொத்தம் 36 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், சுவாச பராமரிப்பு தேவைப்படும் 14 நோயாளிகள் உள்ளனர்.

இறந்த இரண்டு நோயாளிகளின் விவரங்கள் இங்கே:

101-வது இறப்பு (‘நோயாளி 4,657’)

இரத்த புற்றுநோயின் வரலாற்றைக் கொண்ட 64 வயதான மலேசிய நபர். பாலி PUI (விசாரணையின் கீழ்) கிளஸ்டரின் (‘நோயாளி 4,476’) கோவிட்-19 நேர்மறை பாதிப்பு நோயாளியுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு வரலாறு உள்ளது.
ஏப்ரல் 12 ஆம் தேதி பகாங்கில் உள்ள தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், ஏப்ரல் 29 மாலை 4.14 மணிக்கு இறந்துவிட்டார்.

102-வது இறப்பு (நோயாளி 5,282)

உயர் இரத்த அழுத்த வரலாற்றைக் கொண்ட 72 வயதான மலேசிய நபர். ஏப்ரல் 16 ஆம் தேதி சரவாக் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று மதியம் 12.55 மணிக்கு காலமானார்.