உலகில் நடக்கும் நிகழ்வுகளை, அதன் உண்மை நிலையில் இருந்து தவறாமல், யாருக்கும் அஞ்சாமல் மக்களுக்கு வழங்குவதே பத்திரிகைகள். இவை சுதந்திரமாக செயல்பட்டால் தான்,
உண்மை நீடிக்கும்.
பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை உரிமைகளை கட்டிக்காப்பது; பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலை தடுப்பது போன்ற நோக்கத்துடன் ஐ.நா., சார்பில் 1993 முதல், மே 3ம் தேதி, சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம் கடைபிடிக்கப்படுகிறது.உலகில் எத்தனையோ பத்திரிகைகள் உள்ளன. அதன் பெயர் மற்றும் மொழிகளில் மட்டுமே வேறுபாடு இருக்கிறதே தவிர அதன் செயல்பாட்டில் அல்ல. பல்வேறு சூழல்களையும் சமாளித்து, மக்களுக்கு செய்திகளை
வழங்கும் பத்திரிகையாளர்களின் சமூக சேவை பாராட்டுக்குரியது.
எப்படி வந்தது
மிகுந்த ஆபத்து காலத்தில், உலகில் எங்காவது பத்திரிகை சுதந்திரம் பாதிக்கப்பட்டால், அதற்கு எதிராக போராடும் தனி நபர், பத்திரிகை, தொண்டு நிறுவனங்களுக்கு ‘யுனெஸ்கோ’ சார்பில், 1997 முதல் ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது. இது ‘குல்லர்மோ கானோ இசாசா’ என்ற கொலம்பிய நாட்டு பத்திரிகையாளரின் பெயரால் வழங்கப்படுகிறது.
‘எல் எஸ்பெக்டேட்டர்’ என்ற பத்திரிகையில் பணிபுரிந்த இவர், போதை பொருள் மாபியா கும்பலின் சட்டவிரோத கடத்தலை அம்பலப்படுத்தியதால், பத்திரிகை அலுவலகத்தின் வாயிலில், 1986ல் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளும்
கொல்லப்பட்டனர். அந்த பத்திரிகையாளரின் சேவையை பாராட்டி, விருதுக்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.
dinamalar