‘பறக்கும் புத்தகங்கள்’! ‘பன்றி’, ‘துரோகி’’ வார்த்தைகள்! மலாக்கா சட்டமன்றத்தில் அமளி!

மலாக்கா சட்டமன்றம் | இன்று மலாக்கா மாநில சட்டமன்றம், சபாநாயகரை மாற்றுவதற்கான சர்ச்சைக்குரிய சம்பவத்தை மட்டும் காணவில்லை, அதன் சில உறுப்பினர்களின் செயல்களையும் வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.

காலை 9.30 மணிக்குத் கூட்டம் தொடங்கியது. இரு தரப்பு உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதங்களும் விவாதங்களும் எழுந்தன. அவர்களில் பெங்காலான் பாத்து சட்டமன்ற உறுப்பினர் நோர்ஹிசம் ஹாசன் பக்தே மற்றும் கோத்தா லக்சமானா சட்டமன்ற உறுப்பினர் லோ சீ லியோங் ஆகியோருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் மிக சூடாகவும் கிட்டத்தட்ட கைகலப்பு ஏற்படும் அளவிற்கும் இருந்தது, சில கடுமையான வார்த்தைகள் வீசப்பட்டன.

முதலில், இட்ரிஸ் எழுந்து ஓமாரை கூட்டத்தை தொடர்வதில் இருந்து தடுக்க முயன்றார். அவருக்கு சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு இல்லை என்றும் இனி சபாநாயகராக இருக்க தகுதியற்றவர் என்றும் கூறினார்.

அவர் மீதும் துணை சபாநாயகர் மீதும் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை அனுமதிக்குமாறு இட்ரிஸ் ஓமாரிடம் கூறினார்.

மலேசியாகினிக்கு வழங்கப்பட்ட சில வீடியோ காட்சிகளின்படி, எதிர்க்கட்சி தரப்பில் இருந்த சிலரும் அரசாங்க பிரதிநிதிகளை அவதூறாகப் பேசி சர்ச்சையில் பங்கேற்றுள்ளனர்.

“சபாநாயகர் நிற்கும்போது, எல்லோரும் தயவுசெய்து உட்காருங்கள்!” அன்று ஓமார் கூறினார்.

சில பாக்காத்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் இட்ரிஸ் ஓமாரை சபாநாயகராக மதித்து ஏற்றனர், மற்றவர்கள் ஓமாரை பதவியில் இருந்து நீக்குமாறு வலியுறுத்தினர்.

விவாதங்களைத் தொடர்ந்து ஓமார் ஜபார் சட்டமன்றக் கூட்டத்தை மற்றொரு தேதிக்கு ஒத்தி வைத்தார். மலாக்கா மாநில சட்டமன்றத்தின் நகலை இட்ரிஸ், ஓமார் மீது வீசி எறிந்த பின்னர் இந்த வாக்குவாதம் முடிவடைந்தது.

மிகவும் கோபமாக இருந்ததால் புத்தகத்தை ஓமார் மீது வீசியதை இட்ரிஸ் ஒப்புக் கொண்டார். ஆனால் ஓமார் கூறியதைப் போல அவரது நடவடிக்கைகள் சபையை அவமதிக்கவில்லை என்று விளக்கினார்.

இதற்கிடையில், இட்ரிஸும் ஓமாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தபோது, நோர்ஹிசாமுக்கும் லோவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இரு நபர்களும் தங்களுக்கு இடையிலான அரசியல் பிரச்சினைகள் காரணமாக கடந்த மாதம் முதலாகவே வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நோர்ஹிசாம் மற்றும் லோ ஒருவருக்கொருவர் சவால் விட்டனர்.

லோவுக்கு எதிராக நோர்ஹிசாம் “பன்றி” என்ற வார்த்தை வெளிப்பாட்டைப் பயன்படுத்தியது உட்பட பல தொடர்ச்சியான வாக்குவாதங்கள் ஏற்பட்டன.

லோ நோர்ஹிசாமை ஒரு “துரோகி” என்று அழைத்தார். அம்னோவை ஆதரித்து, மலாக்கா பாக்காத்தான் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த அந்த முன்னாள் எக்ஸ்கோவின் நடவடிக்கைகளை குறிப்பிட்டார் லோ.

“பன்றி! பன்றி! பன்றி! பன்றி!” நோர்ஹிசாம் லோவை நோக்கி விரல்களை சுட்டிக்காட்டி கூறினார்.
“நீ ஒரு துரோகி!” லோ கூறினார்.

வீடியோ கிளிப்பின் முடிவில், பிற பிரதிநிதிகள் பின்னர் நோர்ஹிசாமை அமைதிப்படுத்தி உட்காரும்படி கேட்டதும் காணப்பட்டனர்.