சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருதீன் ஷாரி கிரேட் 56 அரசு ஊழியர்கள் மற்றும் அதற்கும் குறைந்த பிரிவை சேர்ந்தவர்கள் RM1,000 உதவித் தொகையைப் பெறுவார்கள் என அறிவித்தார்.
இந்த முடிவை அமிருதின் ஒரு சிறப்பு அறிவிப்பில் வெளியிட்டார்.
“சிலாங்கூர் மாநில அரசு ஊழியர்கள், நகர கவுன்சிலர்கள், தலைவர்கள், மாவட்ட அதிகாரிகள் ஆகியோருக்கு எங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். குறிப்பாக தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை இயக்கி, கோவிட்-19 பாதிப்பைத் தடுப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று அவர் கூறினார்.
“அயராது உழைப்பவர்களின் தியாகங்களை கருத்தில் கொண்டு, முன் வரிசை பணியாளர்கள் மற்றும் கோவிட்-19 இயக்க அறையில் 24 மணி நேரம் பணியாற்றும் அனைத்து கிரேட் 56 மற்றும் அதற்கும் குறைந்த பிரிவை சேர்ந்த மாநில அரசு ஊழியர்களுக்கு நன்றி மற்றும் பாராட்டுக்கான அடையாளமாக RM1,000 உதவித் தொகையை வழங்க மாநில அரசு ஒப்புக் கொண்டுள்ளது,” என்றார் அமிருதீன் ஷாரி.