வங்காளதேசத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஆகஸ்டு 3-ந்தேதி வரை நீட்டிப்பு

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு

டாக்கா: இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்திலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அங்கு இதுவரை 1 லட்சத்து 45 ஆயிரத்து 483 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆயிரத்து 847 பேர் உயிரிழந்துள்ளனர். நோய் தொற்றை குறைப்பதற்காக கொண்டு வரப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. இதனையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஆகஸ்டு 3-ந்தேதி வரை நீட்டித்து வங்காளதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி பொதுமக்கள் மருத்துவ தேவைகளை தவிர இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை வெளியில் நடமாட அனுமதி இல்லை. முககவசம் அணிதல், சமூகஇடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற கட்டுப்பாடுகளை பொதுஇடங்களில் கடைப்பிடிக்க வேண்டும். தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. மார்க்கெட்டுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் இரவு 7 மணிக்குள் மூடப்பட வேண்டும் என்றும், கல்வி நிறுவனங்கள் திறக்க அனுமதி இல்லை என்றும் அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

malaimalar