கோவிட்-19 நோய்த்தொற்றுடன் செயலில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது 85 மட்டுமே என்று சுகாதார இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
நூர் ஹிஷாம் கூற்றுப்படி, 62 நோயாளிகள் இன்று மீட்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என்றும், மொத்த குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை 8,437 ஆக உள்ளது எனவும் கூறினார்.
இதற்கிடையில், இன்று நண்பகல் வரை, ஒரு இறக்குமதி பாதிப்பு மற்றும் இரண்டு உள்நாட்டு நோய்த்தொற்றுகள் சம்பந்தப்பட்ட மூன்று புதிய பாதிப்புகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.
தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) இன்னும் இரண்டு பாதிப்புகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அவர்களுக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது என்றும் நூர் ஹிஷாம் கூறினார்.
கோவிட்-19 இறப்பு விகிதங்களில் அதிகரிப்பு எதுவும் இல்லை என்றும், இதுவரை இறப்புகளின் எண்ணிக்கை 121 ஆக உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ள மொத்த 5,804 நபர்களில், 620 பேர் 13 ஆம் நாள் கோவிட்-19 சோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.