அமெரிக்க கடற்படையில் போர் விமானத்தை இயக்கும் முதல் கருப்பின பெண் விமானி

மேட்லைன் ஸ்வெகிள்

அமெரிக்க கடற்படையின் போர் விமானத்தை முதல் கருப்பின பெண் விமானி இயக்க உள்ளார்.

வாஷிங்டன்: அமெரிக்க கடற்படையில் போர் விமானத்தை இயக்கும் விமானியாக வரலாற்றில் முதல் முறையாக கருப்பினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேட்லைன் ஸ்வெகிள் என்ற அந்தபெண் அமெரிக்க கடற்படை விமானப்பள்ளியில் தனது பயிற்சியை வெற்றிகரமாக முடித்து போர் விமானத்தின் விமானியாக உள்ளார். அவர் இந்த மாத இறுதியில் “தங்கத்தின் சிறகுகள்” என்று அழைக்கப்படும் விமான அதிகாரி அடையாளத்தை பெறுவார் என அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. வர்ஜீனியா மாகாணம் பர்க் நகரைச் சேர்ந்த மேட்லைன் ஸ்வெகிள் கடந்த 2017ம் ஆண்டு அமெரிக்க கடற்படை அகாடமியில் பட்டம் பெற்றார்.

அதனை தொடர்ந்து 3 ஆண்டு கால தீவிர பயிற்சிக்குப் பிறகு தற்போது அவர் போர் விமானத்தின் விமானியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

malaimalar