“நஜிப் தமது சுயவழிபாட்டை உருவாக்குகிறார்”

“மலாய்க்காரர்கள் உட்பட நாம் அந்த மனிதர் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தம்மை சர்வ வல்லமை பெற்றவராக மாற்றிக் கொள்ள முயலுகிறார்.”

தேர்தலில் ஆதரவு கொடுத்தால் பெக்கிடாவுக்கு நஜிப் உதவுவார்

டிவிஜிஎஸ்: நாட்டை நிர்வாகம் செய்வதற்கு நஜிப்புக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறதா அல்லது தமது கட்சிக்குப் பிரச்சாரம் செய்வதற்கு சம்பளம் வழங்கப்படுகிறதா?

சரவாக்டயாக்: “மிதவாதிகள் குழு”, “ஒரே மலேசியா” என நஜிப் பேசுவது எல்லாம் வெற்று சுலோகங்களே தவிர வேறு ஒன்றுமில்லை. அவை மலேசியர்களையும் அனைத்துலக சமூகத்தையும் ஏய்ப்பதற்காக சொல்லப்பட்டவை. பெக்கிடா கூட்டத்தில் அவர் பேசிய பேச்சுக்கள் காட்டுவது போல அவரது நடவடிக்கைகள் நேர்மாறாக இருக்கின்றன.

அவர் அப்பட்டமாக வெறுப்புணர்வைத் தூண்டுகிறார். மலாய்க்காரர் அல்லாதாரையும் முஸ்லிம் அல்லாதாரையும் நம்ப வேண்டாம் என்றும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் மலேசியாவில் எந்த அரசியல் தலைமைத்துவத்திலும் மலாய்க்காரர் அல்லாதாரும் முஸ்லிம் அல்லாதாரும் பங்காற்றுவதற்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டாம் என்றும் அவர் மலாய்க்காரர்களையும் முஸ்லிம்களையும் தூண்டுகிறார். அவ்வாறு செய்தால் மலாய்க்காரர்களும் முஸ்லிம்களும் நசுக்கப்பட்டு விடுவர் என அவர் கருதுகிறார்.

நியாயமானவன்: பெக்கிடா, நஜிப் என்ன உனது கொடையாளரா? உனக்கு என்று கொள்கை இல்லையா? நஜிப்புக்கு நீங்கள் என்ன அவ்வளவு கடமைப்பட்டவரா? பெக்கிடாவைப் போன்ற மன நிலை இரண்டு மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட மலேசியர்களுக்கு இருந்தால் போதும். மலேசியாவின் கதை முடிந்தது.

அலிஸ்காட்: பொய்களைக் கூறுகின்ற, ஏமாற்றுகின்ற, திருடுகின்ற இந்த அரசாங்கத்தை ஆதரிக்கும் பெக்கிடாவுக்கு மனசாட்சியே இல்லை. இந்த அரசாங்கம் ஊழலுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கிறது. நம்பிக்கை துரோகம் செய்கிறது. ஆண்டுப் பொதுக் கூட்டங்களில் வெட்கமில்லாமல் எல்லா நடைமுறைகளையும் மீறுகிறது. எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.

தாய்லெக்: பெக்கிடா, பெர்க்காசா போன்ற அமைப்புக்களிடம் நஜிப் சொல்லும் விஷயங்களைப் பார்க்கும் போது அவர் தமது சுயவழிபாட்டை உருவாக்குவது தெரிகிறது.  (இஸ்லாத்தில் அத்தகைய பாரம்பரியம் அனுமதிக்கப்படுவதில்லை என நான் எண்ணுகிறேன்). மலாய்க்காரர்கள் உட்பட நாம் அந்த மனிதர் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தம்மை சர்வ வல்லமை பெற்றவராக மாற்றிக் கொள்ள முயலுகிறார்.