ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 45 பேர் பலி

தாக்குதலில் காயமடைந்தவர்கள்

ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் 8 பொதுமக்கள் உள்பட 45 பேர் கொல்லப்பட்டனர்.

காபுல்: ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.

இந்த உள்நாட்டு போரில் ஆப்கானிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளித்து வருகின்றன.

இந்நிலையில், அந்நாட்டின் ஹீரேட் மாகாணம் அட்ரஷ்ஹன் மாவட்டத்தின் ஹூம் சியார்ட் பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் பலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நேற்று முன்தினம் அப்பகுதியில் ஆப்கன் விமானப்படையினர் அதிரடி வான்வெளி தாக்குதல் நடத்தினர்.இந்த தாக்குதலில் 37 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆனால் பொதுமக்களில் 8 பேர் உயிரிழந்துளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

malaimalar