கோவிட்-19: எட்டு புதிய பாதிப்புகள்

இன்று, எட்டு புதிய கோவிட்-19 நேர்மறையான பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இது நாட்டின் மொத்த நேர்மறை பாதிப்புகளின் எண்ணிக்கையை 8,964 ஆகக் கொண்டுவருகிறது.

எட்டு புதிய பாதிப்புகளில், மூன்று பாதிப்புகள் மலேசியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட இரண்டு மலேசிய குடிமக்கள் மற்றும் ஒரு மலேசியர் அல்லாதவர் சம்பந்தப்பட்ட இறக்குமதி பாதிப்புகள் என்றார் சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா.

“மூன்று இறக்குமதி பாதிப்புகள் கஜகஸ்தான் (சிலாங்கூரில் ஒரு பாதிப்பு); இந்தோனேசியா (கெடாவில் ஒரு பாதிப்பு) மற்றும் பிலிப்பைன்ஸ் (சபாவில் ஒரு பாதிப்பு)” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் கோவிட்-19 இன் வளர்ச்சி குறித்து தினசரி செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.