எல்லைப் பாகுபாடு காட்டாமல் அனைவரும் ஒன்றிணைவோம்- ஐரோப்பிய யூனியன் தலைவர் உரை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் ஐரோப்பிய யூனியன் நாடுகள் கொரோனா ஒழிப்புக்காக கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. இதில் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சாலா வான் டேர் லயன், கொரோனா விழிப்புணர்வு குறித்து உரையாற்றினார். ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளிடையே உள்ள பிரச்னைகளை நீக்குவது நமது தலையாய கடமை என தெரிவித்தார். ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பேசிய அவர், ஐரோப்பிய மருத்துவ ஏஜென்சி மற்றும் ஐரோப்பிய நோய்த்தடுப்பு மையம் ஆகியவற்றை மீண்டும் பணி செய்ய உத்தரவிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் உயிரியல் ஆராய்ச்சிக்காக பார்டா எனப்படும் அமைப்பை உருவாக்க உள்ளதாக அவர் தெரிவித்தார். ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடுகளில் சில பணக்கார நாடுகளும் உள்ளன. இதில் இத்தாலியும் ஒன்று.

இதுபோன்ற வளர்ச்சியடைந்த நாடுகளின் உதவியுடன் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு உதவ ஐரோப்பிய யூனியன் ஆவண செய்யும் என அவர் தெரிவித்தார். மருத்துவரான வான், கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்து பேசுகையில் நோய் தடுப்புக்காக அனைத்து நாடுகளும் பாகுபாடின்றி ஒன்றிணைய வேண்டும் என்றும் சுயநலத்துக்கு இது நேரமல்ல, ஐரோப்பிய யூனியன் நாடுகள் அனைத்தும் இணைந்து செயல்பட்டால்தான் இதனை முழுவதுமாக ஒழிக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.

malaimalar