இன்றுக்காலை மாமன்னரை சந்தித்த அன்வார், பிற்பகல் 2.00 மணியளவில் ஊடக சந்திப்பு கூட்டத்தில் பேசினார்.
“எனக்கு போதுமான ஆதரவு உள்ளது என்பதற்கான ஆதாரங்களை காட்டினேன், அதன் அடிப்படையில் தற்போதைய பிரதமரின் ஆதரவு சரிந்துள்ளதால், அவர் அந்தப் பதவியை தற்காக்க இயலாது” என்றார்.
“தற்போது நாட்டு நிலவரம் கோவிட்19 -னால் பாதிக்கப்பட்டுள்ளதால், அடுத்த கட்ட நடவடிக்கையை மாமன்னரின் ஆலோசனையின் பேரில்தான் மேற்கொள்ளப்படும்”.
120க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு ஆதரவு 102 க்வழங்கியுள்ளதாக கூறினார். இதன்படி முகிதினின் ஆதரவு 102 -க்கு குறையும்.
மாமன்னர் எனக்கு ஆதரவு வழங்குபவர்களை சந்திப்பார், அதன் அடிப்படையிதான் அவர்களின் பெயர் பட்டியியல் வெளியிடப்படும் என்றார்.
இன்று மதியம், அம்னோவின் மூத்த அமைச்சர், துங்கு இரசாலி அம்சா மாமன்னரை சந்திந்தார். இது அம்னோவின் அரசியல்வாதிகளில் பலர், அன்வாருக்கு ஆதரவாக செயல்படலாம் என்ற யூகத்தை வலுபடுத்தியுள்ளது.