“அடையாளக் கார்டு திட்டம் மீது ஆர்சிஐ-யை அமைப்பது பற்றி அரசாங்கம் அடுத்த ஆண்டு முடிவு செய்யும்”

சபா அடையாளக் கார்டு திட்டம் மீது அரச விசாரணை ஆணையத்தை அமைப்பதா இல்லையா என்பதை அரசாங்கம் முடிவு செய்யும் என பிரதமர் துறை துணை அமைச்சர் லியூ வூய் கியோங் கூறுகிறார்.

என்றாலும் தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான நாடாளுமன்றத் தேர்வுக் குழு (பிஎஸ்சி) அடுத்த ஆண்டு தனது முழு அறிக்கையைச் சமர்பித்த பின்னரே முடிவு எடுக்கப்படும்.

கடந்த வாரம் அந்தக் குழுவின் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட போதிலும் அரசாங்கம் இப்போதைக்கு எந்த முடிவும் செய்யாது என லியூ சொன்னார்.

பிஎஸ்சி இன்னும் நான்கு பொது விசாரணைகளை நடத்த வேண்டியுள்ளது. கூச்சிங்கில் அதன் விசாரணை இன்று நடைபெறுகிறது. கடைசி பொது விசாரணை 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் 13ம் தேதி ஜோகூர் பாருவில் நிகழும் என அவர் மேலும் கூறினார்.

அந்த நான்கு விசாரணைகளும் முடிந்த பின்னர் பிஎஸ்சி முழு அறிக்கையைத் தயாரிக்கும் என லியூ நாடாளுமன்றத்தில் ஊடகங்களிடம் கூறினார்.

அடையாளக் கார்டு திட்டம் மீது ஆர்சிஐ-யை அமைப்பதை அரசாங்கம் நீண்ட காலமாகத் திட்டமாக மேற்கொள்ள விரும்பலாம் என பிஎஸ்சி இடைக்கால அறிக்கை அரசாங்கத்திற்கு யோசனை தெரிவித்துள்ளது பற்றிக் கருத்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட போது லியூ அவ்வாறு கூறினார்.

சபாவில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் அடையாளக் கார்டு திட்டத்தை புலனாய்வு செய்வதா இல்லையா என்பதை அரசாங்கம் முதலில் முடிவு செய்யும். அதற்கு பின்னரே அந்த மாநிலத்துக்கு வெளியிலும் அது போன்ற திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாகச் சொல்லப்படுவது பற்றி அடுத்த முடிவுகளை எடுக்கும்.

லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான லியூ அடையாளக் கார்டு திட்டம் மீதான தமது புகார்களை சபாவில் நடத்தப்பட்ட பிஎஸ்சி பொது விசாரணையின் போது சமர்பித்தார்.