வாஷிங்டன்: சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் தொடர்ந்து மோதல்போக்கு நீடித்த வண்ணம் உள்ளது. இதனையடுத்து அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் நிறுவனங்களை அமெரிக்கா தடை செய்துவருகிறது. இந்நிலையில் நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் முதலீடு செய்யும் அமெரிக்க பங்குதாரர்கள் தற்போது சீன நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டு வருவதாக அமெரிக்க மாகாண துறை தெரிவித்துள்ளது.
80-க்கும் மேற்பட்ட சீன நிறுவனங்களின் பங்குகளை வாங்கும் இந்த முதலீட்டாளர்கள் தங்களது பணத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சீன நிறுவனங்கள் அமெரிக்க இராணுவ மற்றும் அரசியல் ரகசியங்களை உளவு பார்ப்பதாக கூறப்படுகிறது.
பீப்பிள்ஸ் ரிபப்ளிக் ஆஃப் சைனா நிறுவனங்கள் பெரும்பாலும் ராணுவ தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகின்றன. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்குர் பழங்குடி இன மக்களை கண்காணிக்க தொழில்நுட்ப கருவிகளை இந்த நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. இது மனித உரிமை மீறல் என அமெரிக்கா கூறி வருகின்றன.
சீன கம்யூனிச அரசு கட்டுப்படுத்திவரும் ஷாங்காய் மற்றும் சென்சென் எக்ஸ்சேஞ்ச்களில் இந்த நிறுவனங்கள் பங்குதாரர்களாக உள்ளன. உலகப் புகழ் பெற்ற சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹுவவே டெக்னாலஜிஸ், சைனா ஸ்பேஸ்சாட், சைனா ஸ்டேட் ஷிப்ட் பில்டிங் கார்ப்பரேஷன், ஏவியேஷன் இண்டஸ்ட்ரி கார்ப்பரேஷன் ஆஃப் சைனா, சைனா ஏரோஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கார்ப்பரேஷன், எபிக் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸ் லிமிடெட், சென்ஜி ஏவியேஷன் டெக்னாலஜி கார்ப்பரேஷன் உள்ளிட்ட சீன நிறுவனங்களின் பங்குகளை அமெரிக்க முதலீட்டாளர்கள் வாங்கவேண்டாம் என்று அமெரிக்க மாகாணத் துறை அறிவுறுத்தியுள்ளது
dinamalar