‘ஐ.சி.இ.ஆர்.டி. ஒப்புதல் திட்டம் தனது அமைச்சரவை சகாக்களிடமிருந்து வந்தது என்பதை அன்னுவார் அறிந்திருக்கவில்லை’

15-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ) புத்ராஜெயாவைக் கைப்பற்ற, பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) “தாராளவாத சார்பு” மற்றும் “சோசலிச சார்பு” ஆகியவற்றின் கலவையாக மாறியுள்ளது என முத்திரை குத்திய தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அன்னுவார் மூசாவை டிஏபி தலைவர் லிம் கிட் சியாங் விமர்சித்தார்.

அரசாங்கத்தைத் திரும்பப் பெறுவதற்கான பி.எச். முயற்சிகள், அனைத்து வகையான இனப் பாகுபாடுகளையும் அகற்றுவதற்கான சர்வதேச மாநாடு (ஐசிஇஆர்டி) மற்றும் ரோம் சட்டம் போன்ற ஒப்பந்தங்களை அங்கீகரிக்கத் தவறியதே காரணம் என்று அன்னுவார் சொன்னதாகக் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்த ஒப்பந்தத்தின் ஒப்புதலை பெர்சத்துவில் இருந்து, பி.கே.ஆர். நாடாளுமன்ற உறுப்பினராகவும், அப்போதைய வெளியுறவு அமைச்சராகவும் இருந்த சைஃபுதீன் அப்துல்லா முன்மொழிந்ததை லிம் அன்னுவாருக்கு நினைவுபடுத்தினார்.

“பி.எச். நிர்வாகத்தின் போது ஐ.சி.இ.ஆர்.டி. மற்றும் ரோமானியச் சட்டத்தை அங்கீகரிக்க முயன்ற நபர் இப்போது முஹைதீனின் அமைச்சரவையின் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் சைஃபுதீன் அப்துல்லா என்பதை அன்னுவார் உணரவில்லை.

“அன்னுவார் மூசா ஏன் தொடர்ந்து பொய் சொல்கிறார்?” என்று இன்று ஓர் ஊடக அறிக்கையில் லிம் கேள்வி எழுப்பினார்.

பேரணி உட்பட பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்ற பின்னர், ஐ.சி.இ.ஆர்.டி.-யை அங்கீகரிக்கத் தவறியதை சைஃபுதீன் ஒப்புக்கொள்வதில் நம்பிக்கையுடன் இருக்கிறாரா என்றும் லிம் கேள்வி எழுப்பினார்

“ஐ.சி.இ.ஆர்.டி. அரசியலமைப்பு, மன்னர் அல்லது மலாய் அல்லது இஸ்லாமியத்திற்கு முரணானது அல்ல என்பதை நான் வலியுறுத்துகிறேன், ஏனென்றால் உலகில் 1.9 பில்லியன் முஸ்லிம்களில், 99 விழுக்காட்டினர் ஐ.சி.இ.ஆர்.டி. ஒப்புதல் அளித்த நாடுகளில் வாழ்கின்றனர், 57 நாடுகளில் 55 இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புகள் (OIC), மலேசியா மற்றும் புருணை தவிர, ஐ.சி.இ.ஆர்.டி.-ஐ அங்கீகரித்துள்ளன.

“மேலும், முடியாட்சி அமைப்புகளைக் கொண்ட 38 நாடுகளில் 36 நாடுகள் ஐ.சி.ஆர்.டி.-க்கு ஒப்புதல் அளித்துள்ளன; 1970 முதல் இந்த நாடுகளில் ஐ.சி.இ.ஆர்.டி. ஒப்புதல் அளிக்கப்பட்டதனால், மன்னர் ஆட்சிக்குப் பாதகம் விளைந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.

2018-ஆம் ஆண்டின் இறுதியில், ஐ.சி.இ.ஆர்.டி. தோல்வியில் முடிந்தபோது, ​​அவர் சீனாவில் பணி நிமித்தமாக இருந்தார் என்றும் லிம் கூறினார்.

“நவம்பர் 19-ல், அப்போதைய பிரதமர் துன் டாக்டர் மகாதிர் மொஹமட், ஐ.சி.இ.ஆர்.டி. ஒப்புதலுக்கு மத்திய அரசியலமைப்பில் திருத்தங்கள் தேவைப்படும், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாமல் இதனை ‘செய்ய இயலாது’ என்று கூறினார்.

“நவம்பர் 24, 2018, சீனாவில், மலேசிய ஜியான்ஸு அமைப்பின் ஆண்டு விருந்தில் இருந்த நான், என் உரையில், மே 13 போன்ற மற்றொரு இனக் கலவரமாக இது மாறுமென்றால், ஐ.சி.ஆர்.டி.-க்கு ஒப்புதல் அளிக்க எந்தவொரு மலேசியரும் விரும்பமாட்டார் என்று சொன்னேன்,” என்று லிம் தெரிவித்தார்.