சேவியர் ஜெயக்குமாரின் பொங்கல் வாழ்த்து

தோட்டப்புற ரம்மியமான சூழலோடும் கால்நடைகளோடும் பொங்கல் திருநாளைக் கொண்டாடிய காலம் போய் இப்போது முகக்கவரி, கூடல் இடைவெளி, அடிக்கடி கை கழுவதல் என புதிய கட்டுப்பாடுகளுடனும் இயல்புடனும் வாழ்கின்றோம்.

பொங்கல் திருநாளை குடும்பத்தினர்களுடன் மகிழ்வுடன் கொண்டாடுவோம்,  வாழ்வில் மறுமலர்ச்சியும் மகிழ்ச்சியும் மேம்பட தற்போதுள்ள  இடர்பாடுகளிலிருந்து விடுபட்டு, நாட்டு மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தையும் மற்ற நாடுகளுக்கு இணையான வளர்ச்சியையும் கொடுக்கக்கூடிய அரசாங்கத்தை அமைக்க உறுதி பூணுவோம் என்று டாக்டர் சேவியர் தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.