கோவிட் 19 : இன்று 3,337 புதிய நேர்வுகள், 15 மரணங்கள்

இன்று, 3,337 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் பதிவான தினசரி நேர்வுகளில் இதுவே அதிகம் என சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

முன்னதாக, ஜனவரி 12-ம் தேதி, ஆக அதிக (3,309) நேர்வுகள் பதிவாகியது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று, சபாவில் எண்மர், சிலாங்கூரில் மூவர், ஜொகூரில் இருவர் மற்றும் புத்ராஜெயா, நெகிரி செம்பிலானில் தலா ஒருவர் என 15 மரணங்கள் பதிவாகியுள்ளன. ஆக மொத்தம், இதுவரையில் 578 பேர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளதாகவும் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

1,710 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 195 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 86 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று, அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

சிலாங்கூர் (1,036), ஜொகூர் (460), சபா (389), கோலாலம்பூர் (257), பினாங்கு (234), சரவாக் (180), நெகிரி செம்பிலான் (169), பஹாங் (113), பேராக் (92), திரெங்கானு (89), கெடா (86), கிளந்தான் & மலாக்கா (85), லாபுவான் (34), புத்ராஜெயா (24), பெர்லிஸ் (4).

மேலும் இன்று 7 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன :-

கோலாலம்பூர் (2) – டூத்தாமாஸ் கட்டுமானத்தள திரளை (கெப்போங்), ஜாலான் பஹாங் திரளை (கெப்போங், தித்திவங்சா, லெம்பா பந்தாய் & செராஸ்); ஜொகூர் (2) – துரோபிக்கா திரளை (ஜொகூர் பாரு), பாசீர் பாராட் கட்டுமானத்தளத் திரளை (ஜொகூர் பாரு, கோத்த திங்கி, பாசீர் கூடாங்); சிலாங்கூர் (1) – ஜாலான் செலாயாங் திரளை (கோம்பாக்); நெகிரி செம்பிலான் (1) – ஜாலான் ரந்தாவ்-சிலியாவ் திரளை (போர்ட்டிக்சன்); பேராக் (1) – இந்தான் மாஸ் திரளை (ஹீலீர் பேராக்).