“மரியாதையுடன்” பதவி விலகுங்கள் என்று ஜாஹித்தைப் பொந்தியான் அம்னோ இளைஞர் தலைவர் மொஹமட் ஹெல்மி புவாங் கேட்டுக்கொண்டார்.
அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமீடியை, கட்சியை வழிநடத்துவதிலிருந்து ஓய்வு பெறுமாறு மொஹட் ஹெல்மி புவாங் அறிவுறுத்தினார்.
தலைவரின் அணுகுமுறைகள் தற்போதையச் சூழலுக்கு ஏற்ப, குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் கூறியதாக உத்துசான் மலேசியா தெரிவித்துள்ளது.
நீண்ட காலமாக பதவியில் இருக்கும் மற்ற அம்னோ தலைவர்களும் புதிய தலைமுறைக்கு இடம் கொடுக்க, பதவி விலக வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
“இந்த நடவடிக்கை மிகவும் முக்கியமானது, இதனால் புதியத் தலைமுறை, புனிதமான இக்கட்சியைத் தொடர்ந்து நேசிக்கவும் மதிக்கவும் செய்யும்.
“பின்வாங்குவது என்பது தோல்வியைக் குறிக்காது. புதியத் தலைமுறையினரின் போராட்ட மனப்பான்மை மங்காமல் இருக்க அவர் (அஹ்மத் ஜாஹித்) கட்சிக்கு வெளியில் இருந்து உதவ முடியும்,” என்று அவர் நேற்று புத்ராஜெயாவில் உத்துசான் மலேசியாவிடம் கூறினார்.
அன்வர் இப்ராஹிமை ஆதரித்தார் என்ற குற்றச்சாட்டுகளுடனும் நீதிமன்ற வழக்குகள் தொடர்பான பிரச்சினைகளுடனும் இந்த அழைப்பை அச்செய்தித்தாள் இணைத்துள்ளது.
ஹெல்மியிடமிருந்தும் பொந்தியான் அம்னோ தலைவர்களிடமிருந்தும் கூடுதல் தகவல்களைப் பெற மலேசியாகினி முயற்சிக்கின்றது.