நாளை தொடக்கம் சிபு, கிளந்தானிலும் பி.கே.பி.

கோவிட் -19 பாதிப்புகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, கிளந்தானிலும், சரவாக், சிபுவிலும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) செயல்படுத்தப்படவுள்ளது.

மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறுகையில், கிளந்தான் முழுவதும் நாளை, 16 தொடங்கி ஜனவரி 25 வரையில் பி.கே.பி. அமலில் இருக்கும்

சரவாக்கில், சிபு, செலங்காவ் மற்றும் கனோவிட் ஆகிய மாவட்டங்களில், ஜனவரி 16 (நாளை) முதல் ஜனவரி 29 வரை பி.கே.பி.  நடைமுறையில் இருக்கும்.

இந்த இரண்டு பகுதிகளிலும், செந்தர இயக்க நடைமுறைகள் (எஸ்.ஓ.பி.). தற்போது பி.கே.பி. நடைமுறையில் உள்ள கூட்டரசுப் பிரதேசங்கள்  மற்றும் மாநிலங்களுடன் ஒத்திருக்கும்.