நாட்டில் இன்று, 3,211 புதியக் கோவிட் -19 நேர்வுகளும் 8 மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதேவேளையில் 1,939 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அவசரப் பிரிவில் 204 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 87 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை.
மற்ற மாநிலங்களில் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :- சிலாங்கூர் (889), ஜொகூர் (535), சபா (514), கோலாலம்பூர் (401), பினாங்கு (194), கெடா (142), திரெங்கானு (92), கிளந்தான் (79), பேராக் (74), நெகிரி செம்பிலான் & பஹாங் (70), சரவாக் (60), மலாக்கா (58), புத்ராஜெயா (24), லாபுவான் (9).
இன்று, சிலாங்கூர், சுங்கை பூலோ மருத்துவமனையில் நால்வர், சபா குயின் எலிசபெத் மருத்துவமனையில் இருவர், கெடா, அலோர் ஸ்டார், சுல்தானா பஹியா மருத்துவமனையில் ஒருவர், ஜொகூர், குளுவாங், எஞ்சே’ பெசார் ஹஜ்ஜா கல்சோம் மருத்துவமனையில் ஒருவர் என 8 நோயாளிகள் இத்தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். ஆக, இதுவரை நாட்டில் 586 பேர் இந்நோயின் காரணமாக மரணமடைந்துள்ளனர்.
மேலும் இன்று 12 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன :-
ஜொகூர் (3) – ஜாலான் குளுவாங் பணியிடத் திரளை (பத்து பஹாட்), கம்போங் பெராணி திரளை (கோத்த திங்கி), பெர்சியாரான் செலாத்தான் பணியிடத் திரளை (ஜொகூர் பாரு); சிலாங்கூர் (2) – ஜாலான் டெலுக் கோங் பணியிடத் திரளை (கிள்ளான்), லிங்காரான் லிந்தாங் பணியிடத் திரளை (கிள்ளான்); சபா (2) – லாடாங் மதம்பா பணியிடத் திரளை (லாஹாட் டத்து), லாடாங் பாதுரோங் திரளை (குனாக்); கோலாலம்பூர் (1) – டாமாய் கட்டுமானத்தளத் திரளை (செராஸ்); கிளந்தான் (1) – போண்டோக் ஹிடாயா திரளை (மாச்சாங்); புத்ராஜெயா (1) – ரெஸ்தோரண் புத்ரா திரளை; பேராக் (1) – கோத்த ரோட் பணியிடத் திரளை (கிந்தா, லாருட், மாத்தாங் & செலாமா); மலாக்கா (1) – தெம்போக் கெமாஸ் தடுப்புக்காவல் மையத் திரளை (அலோர் காஜா).