கோவிட் 19 : இன்று 3,306 புதிய நேர்வுகள், 4 மரணங்கள், புதியத் திரளைகள்

நாட்டில் இன்று, 3,309 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சிலாங்கூர் தொடர்ந்து அதிக (1,213) புதியப் பாதிப்புகளைப் பதிவுசெய்துள்ளது. அதனைத் தொடர்ந்து சபாவும் (432) ஜொகூரும் (329) உள்ளன.

2,293 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 226 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 94 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மற்ற மாநிலங்களில் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :- கோலாலம்பூர் (250), மலாக்கா (156), கிளந்தான் (150), பினாங்கு (145), கெடா (142), நெகிரி செம்பிலான் (126), பேராக் (114), சரவாக் (100), பஹாங் (84), திரெங்கானு (20),  புத்ராஜெயா (15), லாபுவான் (14).

இன்று, சிலாங்கூர், சுங்கை பூலோ மருத்துவமனையில் இருவர், திரெங்கானு, கோலத் திரெங்கானு சுல்தானா நூர் ஜஹிரா மருத்துவமனையில் ஒருவர், சபா கோத்த கினபாலு குயின் எலிசபெத் மருத்துவமனையில் ஒருவர் என நால்வர் இத்தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். ஆக, இதுவரை நாட்டில் 605 பேர் இந்நோயின் காரணமாக மரணமடைந்துள்ளனர்.

மேலும் இன்று 9 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன :-

கோலாலம்பூர் (2) – ஏரா டுத்தா கட்டுமானத்தளத் திரளை (கெப்போங்), ஜாலான் நிப்பா கட்டுமானத்தளத் திரளை (தித்திவங்சா); சபா (2) – கொம்ப்லக்ஸ் செகாமஹா பணியிடத் திரளை (கினாபாத்தாங்கான்), ஜாலான் புக்கிட் பென்டேரா பணியிடத் திரளை (கோத்த கினபாலு, பாப்பார் & பீயுஃபோர்ட்); சிலாங்கூர் (1) – தாமான் தாசேக் சுங்கை ச்சுவா பணியிடத் திரளை (உலு லங்காட்); கிளந்தான் (1) – புலாவ் லிமா திரளை (பாசீர் பூத்தே); பஹாங் (1) – கேஃபே கெந்திங் பணியிடத் திரளை (பெந்தோங்); நெகிரி செம்பிலான் (1) – ஜாலான் தி.ஜே. பணியிடத் திரளை (சிரம்பான்); ஜொகூர் (1) – ஜாலான் சூரியா திரளை (ஜொகூர் பாரு).