இன்று 3,585 புதிய நேர்வுகள், 11 மரணங்கள், அவசரப் பிரிவில் 111 நோயாளிகள்

கோவிட் 19 | நாட்டில் இன்று, 3,585 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இன்று 11 இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிசாம் கூறினார். ஆக, நாட்டில் இதுவரையில் 700 பேர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர்.

“இன்று கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசத்தில் நால்வர், சரவாக்கில் மூவர், பேராக், ஜொகூர், சிலாங்கூர் மற்றும் பினாங்கில் முறையே ஒருவர் என 11 மரணங்கள் இன்று சம்பவித்துள்ளன.

“அவர்களில் 10 பேர் மலேசியர்கள், ஒருவர் வெளிநாட்டுக்காரர்,” என்றார் அவர்..

4,076 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 280 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 111 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :- சிலாங்கூர் (,295), கோலாலம்பூர் (610), ஜொகூர் (516), சபா (303), சரவாக் (205), நெகிரி செம்பிலான் (129), பினாங்கு (104), மலாக்கா (92), கெடா (88), திரெங்கானு (76), கிளந்தான் (76), பேராக் (58), பஹாங் (15), புத்ராஜெயா (15), பெர்லிஸ் (2), லாபுவான் (1).

மேலும் இன்று 7 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன :-

ஜொகூர் (2) – ஜாலான் பிளாட்டினம் பணியிடத் திரளை (ஜொகூர் பாரு), ஜாலான் பாடி மசூரி திரளை (கூலாய்); திரெங்கானு (2) – தெம்பொக் புக்கிட் பெசி தடுப்புக்காவல் மையத் திரளை (டுங்குன்), கம்போங் புக்கிட் புத்ரா திரளை (செத்தியூ); நெகிரி செம்பிலான் (1) – இந்தான் டெலிமா பணியிடத் திரளை (கோலா பிலா); கெடா (1) – கெலாடி சகா திரளை (கூலிம்); கோலாலம்பூர் (1) – ஜாலான் கொக்ரேன் பணியிடத் திரளை (தித்திவங்சா).