சீனாவை புறக்கணிக்க, உலோக வளத்தை காக்க குவாட் நாடுகள் முடிவு

கனிம வளம், உலோக வளம்

அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள் குவாட் நாடுகள் கூட்டணியில் அங்கம் வகிப்பவை. இந்த குவாட் நாடுகள் கூட்டத்தை ஒருங்கிணைப்பதில் அமெரிக்கா முன்னதாக அதிக ஆர்வம் காட்டியது. பொருளாதார ரீதியாக சீனாவை சாராமல் இயற்கை வளம், எரிவாயுத் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை மேம்படுத்த இந்த குவாட் நாடுகள் கூட்டணி முயற்சி மேற்கொள்கின்றன.

டொனால்ட் டிரம்ப் ஆட்சி காலத்தில் அமெரிக்க மாகாண செயலாளர் மைக் பாம்பியோ, குவாட் நாடுகளை ஒன்றிணைக்க அதிக முக்கியத்துவம் கொடுத்தார். மேலும் தென்கொரியாவில் நடைபெற்ற குவாட் நாடுகள் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.

தற்போது சீனா தனது ராணுவ மற்றும் கப்பல் படை பலத்தை அதிகரித்து உள்ளது. இதனால் உலகிலேயே சக்திவாய்ந்த ராணுவம் மற்றும் கப்பல் படையை கொண்ட நாடு என்ற பெயரை சீனா பெற்றுள்ளது. இது அண்டை நாடுகளையும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளையும் அச்சுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து கார் தொழில்நுட்பத் துறையில் சீனாவின் பங்களிப்பை எதிர்பார்க்காமல் சொந்தமாக கார்களை தயாரித்து விற்க குவாட் நாடுகள் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

கார் தயாரிக்க தேவையான முக்கிய தாது பொருட்கள் மற்றும் உலோகங்களை காக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சீனாவின் உதவி மற்றும் தாது பொருட்கள் ஏற்றுமதி ஆகியவற்றை சார்ந்திருக்காமல் தங்கள் நாட்டில் உள்ள கனிம வளம் மற்றும் உலோக வளத்தை பகிர்ந்தளித்து கார் தயாரிப்பில் ஈடுபட வேண்டும் என்று இந்த கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டது.

dinamalar