சூயஸ் கால்வாயில் தரை தட்டிய எவர் கிரீன் கப்பல் மிதக்க தொடங்கியது

சூயஸ் கால்வாயில் தரை தட்டிய எவர் கிரீன் கப்பல் மிதக்க தொடங்கியது

சூயஸ் கால்வாயில் தரை தட்டிய எவர் கிரீன் கப்பல் மிதக்க தொடங்கியது

சூயஸ் கால்வாயில் தரை தட்டிய எவர் கிரீன் கப்பல் மிதக்க தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கெய்ரோ,எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாய் ஆசியாவின் மத்திய தரைக்கடல் பகுதியையும் ஐரோப்பாவின் செங்கடல் பகுதியையும் இணைக்கும் முக்கிய நீர்வழித்தடமாக உள்ளது. .

இந்நிலையில் சீனாவில் இருந்து நெதர்லாந்து நோக்கி சென்று கொண்டிருந்த 400 மீட்டர் நீளமும் 59 மீட்டர் அகலமும் கொண்ட உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்களில் ஒன்றான எவர்கிவ்வன் என்ற சரக்கு கப்பல் கடந்த செவ்வாய்க்கிழமை சூயஸ் கால்வாயின் இரண்டு பக்க கரைகளில் மோதி சிக்கிக்கொண்டது.

இதனால் அந்த வழித்தடத்தில், கப்பல் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 280-க்கும் அதிகமான கப்பல்கள் சூயஸ் கால்வாயை கடக்க முடியாமல் நடுக்கடலில் நிற்கின்றன. இந்த சம்பவத்தால், சர்வதேச வர்த்தகம், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த ராட்சத சரக்கு கப்பலை கால்வாயின் கரையில் இருந்து நகர்த்தி மீண்டும் மிதக்க வைப்பதற்கான முயற்சிகள் கடந்த 5 நாட்களாக நடந்து வருகின்றன. ஆனால் இந்த முயற்சிகளுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. இதனால் சூயஸ் கால்வாயின் தெற்கு முனையில் காத்திருக்கும் கப்பல்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து வந்தது. கப்பலை மீண்டும் நீரில் மிதக்க வைக்கும் முயற்சியில் 12 இழுவை படகுகள் பணியாற்றி வரும் நிலையில் அது போன்ற மேலும் 2 படகுகள் வரவழைக்கப்பட்டன. இதுவரை 20 ஆயிரம் டன் மணல் அகற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் சூயஸ் கால்வாயில் தரை தட்டிய எவர் கிரீன் கப்பல் மிதக்க தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சூயஸ் கால்வாயில் தரைதட்டிய பிரமாண்ட சரக்குக் கப்பல் மீட்கப்பட்டு மீண்டும் மிதக்கும் நிலைக்கு கொண்டுவரப்பட்டதாக மீட்புக்குழு இந்த தகவலை தெரிவித்துள்ளது. சரக்கு கப்பல் மீட்கப்பட்டதால் மீண்டும் சரக்கு போக்குவரத்து தொடங்கும் சூழல் உருவாகி உள்ளது. தற்போது கப்பலை சுயமாக இயங்க செய்யும் முயற்சியில் மீட்பு குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

Dailythanthi