‘இன்னொரு நீர்மூழ்கி-அது தான் கேடி துங்கு அப்துல் ரஹ்மான் எங்கே ? அது முக்குளிக்க முடியுமா ? அது மேலே எழும்ப முடியுமா ? அது இன்னும் இயங்குகிறதா ?
ஸாஹிட், லிம் குவான் எங்-குடன் நீர்மூழ்கியில் செல்லவில்லை
அடையாளம் இல்லாதவன்: எல்லாம் முடியும் என்ற இந்த நாட்டில் ( Bolehland) உண்மையில் இரண்டு நீர்மூழ்கிக் கலங்கள் இருப்பதை தயவு செய்து மறக்க வேண்டாம். கேடி துங்கு அப்துல் ரஹ்மான், கேடி துன் அப்துல் ரசாக் ஆகியவையே அவை.
அவை இரண்டும் முக்குளிக்க முடியுமா என்பதே கேள்வி ? ஒரு நீர்மூழ்கியில் பயணம் செய்வதற்கு பினாங்கு முதலைமைச்சர் லிம் குவான் எங்-கிற்கும் துணை முதலமைச்சர்களான மான்சோர், பி ராமசாமி ஆகியோர் அழைக்கப்பட்டதால் ஏமாந்து விட வேண்டாம்.
பார்வையாளன்: அது அம்னோ மேற்கொள்ளும் வெறும் பொது உறவு நடவடிக்கை ஆகும். இராணுவத் தளவாடங்கள் சம்பந்தப்பட்ட ஊழல் பற்றிய முக்கியப் பிரச்னையிலிருந்து மக்களைத் திசை திருப்புவதே அதன் நோக்கம்.
பதில் அளிக்கப்பட வேண்டிய கேள்விகள்: மலேசியாவைப் போன்ற சிறிய வளரும் நாடு ஒன்று, 7 பில்லியன் ரிங்கிட் செலவில் நீர்மூழ்கி ஒன்றை வாங்குவதற்கு வரம்புக்குட்பட்ட தனது வளங்களை ஏன் பயன்படுத்த வேண்டும் ? மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது நாம் பல்வேறு இராணுவத் தளவாடங்களுக்கு நாம் ஏன் இவ்வளவு விலை கொடுக்க வேண்டும் ?
அந்தக் கேள்விகளுக்கான பதில் நிச்சயம் இதுவாகத் தான் இருக்க வேண்டும். “மூத்த அமைச்சர்களும் அப்துல் ரசாக் பகிந்தா போன்ற அவர்களது சேவகர்களும் உயர்நிலை ஜெனரல்களும் அரசாங்க ஊழியர்களும் பெரும் லஞ்சத்தை பெறுகின்றனர்.”
அல்தாந்துயா ஷாரிபு கொலை அல்லது நிலச் சரிவினால் சேதமடைந்த ஜெனரல் ஒருவருடைய வீட்டில் தங்கப் பாளங்களும் அமெரிக்க நாணய நோட்டுக்களும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதனால் மிகவும் கவலை அடைந்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அவருடைய வீட்டுக்குச் சென்று சேதத்தைப் பார்வையிட்டதாகவும் தி ஸ்டார் செய்தி வெளியிட்ட்டது போன்ற வழக்கத்துக்கு மாறான சம்பவங்கள் நிகழ்ந்தால் மட்டுமே அந்தத் திருட்டுக்கள் பற்றி பொது மக்களுக்குத் தெரிய வருகிறது.
சாமுவேல் இங்: லிம் அவர்களே நான் உங்கள் தலைமைத்துவத்தையும் தனிப்பட்ட நேர்மையையும் பாராட்டுகிறேன். ஆனால் பினாங்கு முதலமைச்சர் என்ற முறையில் நீங்கள் உங்கள் இரண்டு துணை முதலமைச்சர்களுடன் அந்த நீர்மூழ்கியில் பயணம் செய்வது தவறான முடிவாகும்.
ஒரே நீர்மூழ்கியில் பயணம் செய்வதற்கு பினாங்கின் மூன்று மூத்த நிர்வாகிகளையும் எபப்டி அனுமதிக்க முடியும் ? காரணம் அந்த நீர்மூழ்கியின் பணித் திறன் கேள்விக்குரியதாக உள்ளது.
ஒஸ்கார் கிலோ: ஒரே நேரத்தில் மூன்று உயர் நிலை அரசாங்க அதிகாரிகளையும் அனுப்பும் முடிவு நல்ல யோசனை அல்ல. முதலமைச்சரும் துணை முதலமைச்சர்களும் வெவ்வேரு வாகனங்களில் செல்ல வேண்டும் என்னும் நடைமுறை இல்லையா ?
கமலப்பன்கள்: உங்களுடன் செல்ல தற்காப்பு அமைச்சர் மறுத்ததும் லிம் குவான் எங் குழுவினர் பின் வாங்கியிருக்க வேண்டும்.
பிரிங்கி: லிம் குவான் எங் பாதுகாப்பாக திரும்புவாரா என்பது முக்கியமானது அல்ல. அது முழுக்க முழுக்க அபத்தமான விஷயமாகும். பட்டுவாடா செய்யப்பட்ட நேரத்தில் அந்த நீர்மூழ்கிகள் ஏன் முக்குளிக்க முடியவில்லை என்ற கேள்விக்குப் பதில் கிடைக்கவே இல்லை. அந்தக் கோளாறைச் சரி செய்வதற்கு எவ்வளவு பணம் செலவு செய்யப்பட்டது ?
நீலகிரி: ‘இன்னொரு நீர்மூழ்கி-அது தான் கேடி துங்கு அப்துல் ரஹ்மான் எங்கே ? அது முக்குளிக்க முடியுமா ? அது மேலே எழும்ப முடியுமா ? அது இன்னும் இயங்குகிறதா ? அப்படி என்றால் அது மலாக்கா தொல்பொருள் காட்சிக் கூடத்துக்கு அனுப்பப்பட்டு விட்டதா ?