இன்று 6,493 புதிய நேர்வுகள், 50 மரணங்கள்

கோவிட் 19 | இன்று நாட்டில், 6,493 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

கிள்ளான் பள்ளத்தாக்கு அதிக எண்ணிக்கையிலான தினசரி நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது, அதனைத் தொடர்ந்து சிலாங்கூரில் 2,163, கோலாலம்பூரில் 641 நேர்வுகள் பதிவாகியுள்ளன.

பெர்லிஸ் (3), லாபுவான் (84) மற்றும் புத்ராஜெயா (20) தவிர, பெரும்பாலான மாநிலங்களில் மூன்று இலக்கங்களில் புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளன.

இதற்கிடையில், இன்று 50 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 2,149 பேர் பலியாகியுள்ளனர்.

சிலாங்கூர் (22) அதிக எண்ணிக்கையிலான இறப்புகளைப் பதிவுசெய்தது, அதைத் தொடர்ந்து சரவாக் (8), ஜொகூர் (5), கெடா (4), கோலாலம்பூர் (3), நெகிரி செம்பிலான் (2), பேராக் (2), மலாக்கா (2), பினாங்கு (1), கிளந்தான் (1) என பதிவாகியுள்ளன.

இன்று 4,508 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 643 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 363 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் – 2,163 (163,747), கோலாலம்பூர் – 641 (52,538), சரவாக் – 612 (40,871), கிளந்தான் – 467 (21,307), கெடா – 434 (14,621), ஜொகூர் – 406 (52,937), சபா – 144 (60,053), ஜொகூர் – 406 (52,937), பினாங்கு – 302 (25,004), நெகிரி செம்பிலான் – 370 (21,874), பேராக் – 382 (17,994), மலாக்கா – 165 (9,377), பஹாங் – 161 (7,282), திரெங்கானு – 139 (6,516), லாபுவான் – 84 (2,638), புத்ராஜெயா -20 (1,626), பெர்லிஸ் – 3 (410).

மேலும் இன்று, 18 புதியத்  திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன, 10 பணியிடத் திரளைகள் மற்றும் ஆறு மத நிகழ்ச்சிகளை உள்ளடக்கியது. பள்ளி தொடர்பான திரளைகள் எதுவும் இல்லை. ஹரி ராயா விடுமுறையில் இருந்து அனைத்து கற்றல் நிறுவனங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.