அமேசான் நிறுவன சிஇஒ பொறுப்பில் இருந்து ஜெஃப் போசோஸ் இன்று விலகல்

அமேசான் நிறுவன சிஇஒ பொறுப்பில் இருந்து ஜெஃப் போசோஸ் இன்று விலகல்

உலகின் மிகப்பெரும் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து ஜெஃப் போசாஸ் இன்று விலக உள்ளார்.

வாஷிங்டன், உலகின் மிகப்பெரும் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து ஜெஃப் போசாஸ்  இன்று விலக உள்ளார்.

ஜெஃப் பெசோஸ்  இனி,  விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின் உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு அதிக நேரம் செலவிடுவார் என கூறப்படுகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பாக அமேசான் நிறுவனத்தை தொடங்கிய அதே நாளில் ஜெப் போசஸ் நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து விலக உள்ளார்.

உலக அளவில் மிகவும் பிரபலமான நிறுவனம் அமேசான். 1994-ம் ஆண்டு மிகவும் எளிமையான முறையில் தொடங்கப்பட்ட இந்த அமேசான் நிறுவனமானது, தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு, மிகவும் பிரபலமான நிறுவனமாகவும் காணப்படுகிறது. உலகின் பெரும் கோடீஸ்வரராக உயர்ந்த ஜெப் பிஸோஸின் நிகர சொத்து மதிப்பு 20,000 கோடி டாலர் ஆகும்.

இணையதளம் மூலம் 1994ஆம் ஆண்டு புத்தக விற்பனையை தொடங்கிய ஜெஃப் பெசோஸ், தற்போது தொலைக்காட்சி, கணினி என அனைத்து பொருள்களையும் இணையதளத்தில் விற்பனை செய்யும் நிறுவனமாக அமேசானை உருவாக்கியுள்ளார்.

dailythanthi