டோக்யோ ஒலிம்பிக்: ஸ்கேட்போர்டிங்கில் தங்கப் பதக்கம் வென்ற 13 வயது வீராங்கனை

டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் முதன்முறையாக பெண்கள் ஸ்ட்ரீட் ஸ்கேட்போர்டிங்கில் ( Street Skateboarding) தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் ஜப்பானின் மோம்ஜி நிஷியா.

“நான் வெற்றி பெறுவேன் என்று எதிர்பாக்கவில்லை. ஆனால் என்னை சுற்றியிருந்தவர்கள் எனக்கு உற்சாகமூட்டினர். நான் வெற்றி பெற்றதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி” என்கிறார் அந்த 13 வயது வீராங்கனை.

ஸ்கேட்போர்டிங் இந்த ஒலிம்பிக் போட்டியில்தான் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவேதான் ஒலிம்பிக் வரலாற்றின் முக்கிய பக்கங்களில் இடம்பெறுகிறார் நிஷியா.

“ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெறுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் இளம் வீராங்கனை என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி” என்கிறார் நிஷியா.

(நன்றி பிபிசி செய்திகள்)