கடந்த 24 மணி நேர நேரத்தில், 17,170 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிலாங்கூர் (7,163), கோலாலம்பூர் (2,138), கெடா (1,212) மற்றும் ஜொகூர் (1,054) என மூன்று மாநிலங்களும் ஒரு கூட்டரசுப் பிரதேசமும் 4 இலக்கங்கங்களில் நேர்வுகளைப் பதிவு செய்துள்ளன.
மேலும், இன்று 174 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 8,725– ஆக உயர்த்தியுள்ளது.
இதற்கிடையில் இன்று, 12,930 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 1,043 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 531 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-
சிலாங்கூர் – 7,163 (394,927), கோலாலம்பூர் – 2,138 (118,951), ஜொகூர் – 1,054 (88,435), சபா – 776 (82,620), சரவாக் – 582 (75,793), நெகிரி செம்பிலான் – 884 (69,483), பினாங்கு – 554 (44,431), கெடா – 1,212 (42,961), கிளந்தான் – 615 (41,758), பேராக் – 596 (36,094), மலாக்கா – 416 (30,088), பஹாங் – 638 (23,243), திரெங்கானு – 437 (15,807), லாபுவான் – 11 (9,645), புத்ராஜெயா – 84 (3,735), பெர்லிஸ் – 10 (675).
மேலும் இன்று, 36 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றுள் பாதி பணியிடத்தையும், 14 சமூகப் பரவலுடனும் தொடர்புடையவை ஆகும்.