நாடாளுமன்றக் கூட்டம் தொடர்பான 11 நேர்மறை கோவிட் -19 நேர்வுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன, அவற்றில் ஒன்பது, நேற்று 1,183 தனிநபர்கள் சம்பந்தப்பட்ட திரையிடல் சோதனைகள் மூலம் கண்டறியப்பட்டன.
இரண்டு நாடாளுமன்ற ஊழியர்கள் நேர்மறையானவர்கள் என உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, திரையிடல் சோதனை செய்யப்பட்டது.
ஆர்டிகே உமிழ்நீர் ஆன்டிஜனைப் பயன்படுத்தி, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களை உள்ளடக்கிய சோதனை, நேற்று இரவு 8.30 மணியளவில் நிறைவடைந்தது என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
“ஆர்டிகே ஆன்டிஜென் உமிழ்நீர் சோதனை கருவி மூலம் திரையிடப்பட்டவர்களில், 10 நேர்வுகள் நேர்மறையாக கண்டறியப்பட்டன.
“10 நேர்மறை நேர்வுகளில் இரண்டு இலேசான, ஆனால் நிலையான அறிகுறிகளை கொண்டவை, அதே நேரத்தில் எட்டு நேர்வுகள் அறிகுறியற்றவை. 10 நேர்மறை நேர்வுகளை சுகாதார அலுவலகம் தொடர்ந்து பின்பற்றும்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
தனிநபர் ஒருவர் இருமல் அறிகுறிகளைக் காட்டியதைத் தொடர்ந்து, அன்று மதியம் ஒரு நேர்வு கண்டறியப்பட்டது.
இதற்கிடையில், ஜூலை 26 முதல் 28 வரை கடமையில் இருந்த ஒரு நாடாளுமன்ற அதிகாரி சம்பந்தப்பட்ட மற்றொரு நேர்வு நேற்று ஒரு மருத்துவ மையத்தில் கண்டறியப்பட்டது. இருமல் மற்றும் காய்ச்சல் அறிகுறிகளைக் காட்டிய பிறகு அவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.