டோக்யோ ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் கத்தார் நாட்டைச் சேர்ந்த முர்தாஸ் எஸ்ஸா பார்சிமும் இத்தாலியின் கியான்மார்கோ தாம்பெரியும் தங்கப்பதக்கத்தை வென்றார்கள்.
இந்த சம்வம் இறுதியாக கடந்த 1912-ஆம் ஆண்டில் நடந்தது. மீண்டும் இந்த சமபவம் இந்த ஆண்டில் நடப்பது ஆச்சர்யமூட்டும் ஒரு நிகழ்வாகக் கருதப்படுகிறது. டோக்யோ ஒலிம்பி உயரம் தாண்டுதலில் வீரர்கள் அடுத்தடுத்த உயரங்களைத் தாண்டிக் கொண்டே இருந்தார்கள். ஆகவே போட்டி மிக நீண்ட நேரமாக நீடித்துக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் கத்தார் நாட்டைச் சேர்ந்த பார்சிமும் இத்தாலியின் தாம்பெரியும் 2.37 மீட்டர் உயரத்தைத் தாண்டியிருந்தார்கள்.
அடுத்ததாக 2.39 மீட்டர் உயரத்தைத் தாண்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மூன்று முறை முயன்றும் இருவராலும் அந்த உயரத்தைத் தாண்ட இயலவில்லை. ஒருவேலை தாண்டினால் அது ஒலிம்பிக் சாதனையாகக் கருதப்பட்டிருக்கும்.
இருவருக்கும் இன்னொரு வாய்ப்பு தரப்பட்டது. அப்போது பார்சிம், “இரண்டு தங்க பதக்கங்கள் தர இயலுமா?” என வினவினார். முடியும் என்ற பதில் வந்ததும், தாம்பெரி துள்ளி குதித்தி தரையில் புரண்டு தனது மகிழ்சியை உணர்சி ததும்ப வெளிப்படுதினார்.
இருவருக்கும் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. இந்த முடிவு பெரிய வரவேற்பைப் பெற்றது. கூடியிருந்தவர்கள் ஆராவாரம் செய்தனர்.
தாம்பெரி இதற்கு முன்பு 2016-இல் ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக கால் முறிவால் அந்தப்போடியில் கலந்து கொள்ள இயலவில்லை. இந்தப்போட்டியில் பார்சிம் இன்னொரு முறை தாண்டும் முயற்சியை மேற்கொண்டிருக்கலாம், ஆனால், அதை அவர் தனது சக போட்டியாளருக்காக செய்யவில்லை.
தாம்பெரியும் பார்சும் போட்டி வழி பெற்ற புகழைவிட, தங்களின் பகிர்வால் உலக மக்களின் ஆசிகளை பெற்றுள்ளனர்.
இந்தப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வழங்கப்படவில்லை. மூன்றாவதாக 2.37 மீட்டர் உயரம் தாண்டிய பெலாரஸ் நாட்டு வீரர் மாக்சிமுக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது.
(நன்றி Tamil Webdunia)