ஜகார்த்தா: இந்தோனீசியாவில் பெரும்பாலோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வமுடன் உள்ளனர். ஆனால் போதுமான தடுப்பூசிகள் இல்லை. இதனால்தான் பலர் தடுப்பூசி போடாமல் உள்ளனர்.
தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் இருந்தும் இன்னமும் தடுப்பூசி போடாதவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அவர்களில் எண்பது விழுக்காட்டினர், தடுப் பூசிக்கு முன்பதிவு செய்யக் காத்தி ருப்பதாகக் கூறியுள்ளனர்.
உடல்நிலை, போக்குவரத்து வசதி போன்ற இதர காரணங் களாலும் அவர்களால் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியவில்லை.
கடந்த மாதம் புள்ளியியல் துறை இந்த ஆய்வை நடத்தியது. இதர 4.2 விழுக்காட்டினர் தடுப்பூசியின் ஆற்றல் குறித்து சந்தேகம் தெரிவித்தனர். 15.8 விழுக்காட்டினர் பக்க விளைவுகள் ஏற்படலாம் என்று கவலை தெரிவித்தனர்.
கொள்ளைநோய்க்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்து வருவதால் தடுப்பூசி போடுவதை அரசாங்கம் தீவிரமாக்கியுள்ளது.
அமெரிக்கா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளில் தடுப்பூசிகள் இருந்தாலும் சிலர் போட்டுக் கொள்ள மறுக்கின்றனர்.
இந்தோனீசியா போன்ற வளரும் நாடுகள் தடுப்பூசி இல்லாததால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் 50 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். அந்நாட்டுடன் ஒப்பிடுகையில் இந்தோனீசியாவில் எட்டு விழுக்காட்டினர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் நாளுக்கு குறைந்தது 2.5 மி. தடுப்பூசிகளை போட இந்தோனீசிய திட்டமிட்டு உள்ளது.
இம்மாத இறுதிக்குள் தலைநககர் ஜகார்த்தாவிலும் சுற்றுலா நகரமான பாத்தாமிலும் 100 விழுக்காடு தடுப்பூசி போடப்படும் என்று சுகாதார அமைச்சர் புடி குனாடி சடிகின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஒரு முறையா அல்லது இரண்டு முறையா என்பது குறித்து அவர் விளக்கவில்லை.
பெரும்பாலான கொவிட்-19 மரணங்கள் தடுப்பூசி போடாததால் ஏற்பட்டுள்ளது என்று அவர் குறிப் பிட்டார். ஜகார்த்தாவில் உள்ள ஒரு பொது மருத்துவமனையில் மேற் கொள்ளப்பட்ட சிறிய ஆய்வில் கிருமித்தொற்றால் மரணமடைந்த 89 பேரில் 88 பேர் தடுப்பூசி போடாதவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. மார்ச் முதல் ஜூன் வரையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 928 பேரிடம் ஆய்வு நடத்தப் பட்டது.
(நன்றி Tamil murasu)