வீட்டில் நாம் அடிக்கடி பெற்றோர்களுடன் சண்டை போடுவோம். கருத்து வேறு பாடு வரும்போது இவ்வாறான சண்டைகள் வருவது சகஜம் தான். இப்படியான சண்டைகள் வரும்போது சில நேரம் நாம் வீட்டை விட்டு வெளியே சென்ற சற்று கோபத்தை தணித்துவிட்டு பின்னர் வீட்டிற்கு வருவோம்.
ஆனால் சமீபத்தில் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு இளம் வாலிபர் தன் வீட்டில் சண்டை போட்டுவிட்டு, பெற்றோர் மீது உள்ள கோபத்தில் பாகிஸ்தான் பா்டரை கடந்து இந்தியாவிற்குள் வந்துவிட்டார்.
15 வயதான இந்த பாகிஸ்தான் சிறுவன் குஜராத் மாநிலம் குட்ச் மாவட்டத்தில் உள்ள இந்திய எல்லைக்குள் எல்லை பாதுகாப்புபடை வீரர்கள் கையில் சிக்கினார். இந்த சம்பவம் கடந்த ஞாயிறு அன்று நடந்துள்ளது. காலை 11 மணிக்கு இந்த சிறுவனை கைது செய்த எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் அவனிடம் விசாரணை நடத்திய போது அவர் பாகிஸ்தான் தார் பர்கர் மாவட்டத்தை சேர்ந்தவன் என்று தெரியவந்தது.
அவன் தான் தனது பெற்றோருடன் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு ஓடி வந்ததும். அந்த கோபத்தில் எல்லையை தாண்டியதும் தெரியவந்தது. இதையடுத்து எல்லை பாதுகாப்பு படையினர் அந்த சிறுவனுக்கு மருத்துவ சோதனை செய்து அவனை போலீசாரிம் ஒப்படைத்தனர். தற்போது பாகிஸ்தான் அரசுடன் பேசி அவனை திரும்ப பாகிஸ்தானில் கொண்டு விடும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
(நன்றி Tamil Samayam )