கொரோனா உயிரிழப்பு; உலக நாடுகளில் ஒருநாள் பதிவு இந்தோனேசியாவில் அதிகம்

உலக நாடுகளில் இந்தோனேசியாவில் அதிக அளவாக ஒருநாள் கொரோனா உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன.

ஜகார்த்தா, உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு மொத்தம் 21,21,03,181 ஆக உள்ளது.  உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44,35,512 ஆக உள்ளது.  உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 18,97,33,602 ஆக உள்ளது.

உலக அளவில் மொத்த கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது.  எனினும், உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தோனேசியாவில் அதிக அளவாக ஒருநாள் கொரோனா உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன.

இந்தோனேசியாவில் நேற்று மட்டும் ஒரே நாளில் 1,361 பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர்.  அதற்கு அடுத்து ரஷ்யாவில் 797 பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர்.  இதற்கடுத்து, 3வது இடத்தில் மெக்சிகோ (761 பேர்) உள்ளது.  இதனை தொடர்ந்து, பிரேசில் – 585, ஈரான் – 544, அமெரிக்கா – 515, பிலிப்பைன்ஸ் – 398 ஆகியவை உள்ளன.

dailythanthi