காபூல்: தலிபான்கள் முன்னதாக ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து கொடுங்கோல் ஆட்சி செய்து வருகின்றது. கடந்த 1996 முதல் 2001 ஆம் ஆண்டுவரை தலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்தபோது 10 வயதுக்கு மேல் பெண் குழந்தைகள் படிக்க கூடாது, பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது, மற்றும் இசைக்கு தடை என்கிற இஸ்லாமிய பழமைவாத ஷரியத் சட்டம் அமலில் இருந்தது.
அதன் பின்னர் கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவின் ஆதரவுடன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆப்கானிஸ்தான் நாட்டை ஆட்சி செய்து வந்தனர். 20 ஆண்டுகள் கழித்து தற்போது தலிபான் ஆட்சியைப் பிடித்துள்ளது. தற்போதைய மீண்டும் இந்த சட்டம் அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி உலக ஊடகங்கள் மத்தியில் எழுந்தது.
இதுகுறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் பெண்களின் பாதுகாப்பு கருதி ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் வேலைக்குச் செல்ல தலிபான் அரசு தடை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதே சமயத்தில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்படாது என்று அவர் உறுதியளித்துள்ளார்.
பணிக்குச் செல்ல விரும்பும் பெண்கள் பலர் மீட்பு விமானங்கள் மூலம் அமெரிக்காவிற்கு சென்று குடியேற விரும்புவது குறிப்பிடத்தக்கது.
இசைக்கு தடை!
ஆப்கானிஸ்தானில் “இசைக்கு” தடை விதிக்கப்படும்.இசுலாம் மதத்தில் “இசை” என்பது தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.
பல நாட்கள் நீடிக்கும் பயணங்களில் பெண்கள் ஒரு ஆண் துணையுடன் பயணம் செய்வது கட்டாயமாக்கப்படுகிறது.
பெண்கள் பள்ளி மற்றும் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்படும்; ஆனால் இசாப்(Hijab) அணிவது கட்டாயம். என தாலிபான் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்.
(நன்றி Dinamalar)